வங்கி ஊழியர்களுக்கு Good News; இனி அதிக ஓய்வூதிய பலன்கள், அதிக குடும்ப ஓய்வூதியம்
வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், புதிய ஓய்வூதிய அமைப்பில் அதாவது NPS பங்களிப்பில் அரசு செலுத்தும் பங்கு அதிகரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், புதிய ஓய்வூதிய அமைப்பில் அதாவது NPS பங்களிப்பில் அரசு செலுத்தும் பங்கு அதிகரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. குடும்ப ஓய்வூதியத்தை, ஓய்வு பெறும் போது பெறப்பட்ட ஊதியத்தின் 30% வரை உயர்த்துவதற்கான இந்திய வங்கி சங்கத்தின் முன்மொழிவுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால், வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ .30,000 லிருந்து ரூ .35,000 வரை உயரும். மும்பையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் நிதி அமைச்சகத்தின் செயலாளர், நிதி சேவைகள் துறை செயலாளர் இதை அறிவித்தார்.
NPS பங்களிப்பு 40% அதிகரிக்கும்
தற்போது, பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய நிதியில் (NPS) வங்கிகள் அளிக்கும் பங்களிப்பு 10%ஆகும். இப்போது இது 14%ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இருப்பினும் ஊழியரின் குறைந்தபட்ச பங்களிப்பு 10%ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம், பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களுக்கான NPS விதி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக இருக்கும்
ஓய்வூதிய நிதியில் அதிக பணம் கிடைக்கும்
தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ், மத்திய ஊழியர்களுக்கான அரசாங்கத்தின் பங்களிப்பு அடிப்படை மற்றும் கொடுப்பனவின் 14 சதவீதமாகவும், ஊழியரின் குறைந்தபட்ச பங்களிப்பு 10 சதவீதமாகவும் உள்ளது. இப்போது வங்கி ஊழியர்களும் இதன் பலனைப் பெறுவார்கள். இந்த விதியை அமல்படுத்தியதால், வங்கி ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அதிகமாக இருக்கும்.
இது தவிர, வங்கி ஊழியர்கள் இறந்த பிறகு கிடைக்கும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான விதிகளையும் நிதி அமைச்சகம் மாற்றியுள்ளது. ஒரு வங்கி ஊழியர் இறந்தால், அவருடைய குடும்பத்திற்கு, இனி கடைசி சம்பளத்தில் 30 சதவிகிதம் ஓய்வூதியமாக கிடைக்கும்.
ALSO READ: PM Kisan திட்டத்தில் இவர்களுக்கெல்லாம் நன்மை கிடைக்காது? உங்களுக்குக் கிடைக்குமா?
வங்கிகளின் செயல்பாடுகளில் திருப்தி
முன்னதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளில் திருப்தி தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கியின் உடனடியாக திருத்தும் நடவடிக்கை தேவைப்படும் வங்கிகள் என்ர வரம்பில் இருந்து பல வங்கிகள் வெளிவந்துள்ளன என்று அவர் பாராட்டினார். இந்த விவகாரத்தில், நிதிச் சேவைகள் செயலாளர் தேபாஷிஷ் பாண்டா கூறுகையில், பல பொதுத்துறை வங்கிகள் இப்போது லாபத்தில் இயங்குகின்றன. எனவே, முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. வங்கிகள் கூட்டாக கடந்த ஆண்டு முதல் ரூ .69,000 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளன. இதில் ரூ .10,000 கோடி பங்கு மூலதனம் அடங்கும். அவர்கள் மேலும் ரூ .12,000 கோடி முதலீட்டை திரட்டும் பணியில் உள்ளனர்.
நிறுவனங்களில் குறைந்தபட்ச பங்கு
காப்பீட்டு நிறுவனங்களில் பங்குகளை குறைக்கும் திட்டம் குறித்து, சீதாராமன், இதுபோன்ற நிறுவனங்களில் அரசு குறைந்தபட்ச பங்குகளை வைத்திருக்கும் என்பதால், ஊழியர்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், அவர்களின் நலன்களையும் கவலைகளையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். வங்கி உத்தரவாதங்களுக்கு மாற்றாக இன்சூரன்ஸ் பத்திரங்களை அறிமுகப்படுத்த அரசு பரிசீலிக்கிறதா என்று கேட்டபோது, நிதி அமைச்சர் இது ஒரு பரிந்துரை நிலையில் மட்டுமே உள்ளது என்று கூறினார்.
ALSO READ: Shocking: இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் PM Kisan தவணை கிடைக்காது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR