புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளில் முன்னணி நிறுவனமான கனரா வங்கி தனது நிலையான வைப்புத்தொகையின் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. வட்டி விகிதங்கள் 0.2 சதவீதம் அதிகரித்துள்ளன. குறைந்தபட்சம் 2 வருடங்களுக்கு FD போடுவோருக்குதான் இதன் பயன்கள் கிடைக்கும். அதே நேரத்தில், HDFC வங்கி வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய வட்டி விகிதங்கள் என்ன


கனரா வங்கியின் (Canara Bank) கூற்றுப்படி, இந்த அதிகரிப்புக்குப் பிறகு, குறைந்தது 2 வருட Fixed Deposit மற்றும் 3 ஆண்டுகளுக்கு குறைவான மெச்யூரிட்டி உள்ள FD-களுக்கு இப்போது 5.4 சதவீத வட்டி கிடைக்கும். முன்னதாக இந்த வட்டி விகிதம் 5.2 சதவீதமாக இருந்தது. இது தவிர, 3 முதல் 10 ஆண்டுகள் மெச்யூரிட்டி உள்ள FD-களில் வட்டி விகிதம் 5.3 சதவிகிதத்திலிருந்து 5.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி கிடைக்கும்


அந்த அறிக்கையின்படி, மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) திருத்தப்பட்ட கட்டணத்தில் அரை சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படும். புதிய விகிதங்கள் நவம்பர் 27 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.


ALSO READ: HDFC வாடிக்கையாளர்கள் உஷார்: வங்கிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது RBI


HDFC ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது


முன்னதாக, HDFC வங்கி (HDFC Bank) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையான வைப்புத்தொகையின் (FD) வட்டி விகிதங்களை வங்கி குறைத்துள்ளது. இவை 0.20 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன.


HDFC வங்கி ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டுகளில் மெச்யூர் ஆகும் டெபாசிட்டுகளில் வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. மீதமுள்ள கால வைப்புத்தொகையின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.


HDFC வங்கியின் 1 ஆண்டு வைப்புக்கான வட்டி விகிதங்கள் (Interest Rates) 0.20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டு வைப்புத்தொகையில், வங்கி வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்துள்ளது.


புதிய விகிதத்தின்படி, HDFC வங்கி 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான வைப்புத்தொகைக்கு 2.50% வட்டி அளிக்கிறது. 30-90 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு இது 3 சதவீதமாக உள்ளது.


ALSO READ: SBI, RuPay, JCB இணைந்து அறிமுகப்படுத்தும் Contactless Debit Card: நன்மைகள் பல, விவரம் உள்ளே


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR