வருமான வரி தாக்கல்: அதிகரித்து வரும் பணவீக்கத்தைத் தடுக்க, கடந்த நான்கு மாதங்களில் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி நான்கு முறை உயர்த்தியுள்ளது. மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 1.90 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதற்கிடையில், இந்திய பொருளாதாரத்திற்கு நல்ல செய்தி வரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். நடப்பு நிதியாண்டில் நவம்பர் 10 ஆம் தேதி வரை மொத்த நேரடி வரி வசூல் 31 சதவீதம் அதிகரித்து ரூ.10.54 லட்சம் கோடியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனிநபர் மற்றும் பெருநிறுவன வரிகள் அடங்கும்


குறிப்பாக தனிநபர் வருமான வரி வசூல் சிறப்பாக செயல்பட்டதே இந்த வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாக நிதி அமைச்சகத்தின் அறிக்கை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ரீஃபண்டின் சீராய்வுக்குப் பிறகு நிகர நேரடி வரி வசூல் ரூ.8.71 லட்சம் கோடியாக இருந்தது. 



இதில் தனிநபர் மற்றும் பெருநிறுவன வரிகளும் அடங்கும். இது பொது பட்ஜெட்டில் ஆண்டு முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 61.31 சதவீதமாகும்.


மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு பெரிய அறிவிப்பு, அரசு முக்கிய விதிகளை மாற்றியது 


நவம்பர் 10 ஆம் தேதி வரை ரூ.1.83 லட்சம் கோடி மதிப்பிலான ரீஃபண்ட்


ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ரூ.1.83 லட்சம் கோடி மதிப்பிலான ரீஃபண்ட் அளிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘2022 நவம்பர் 10ஆம் தேதி வரையிலான மொத்த நேரடி வரி வசூல் ரூ.10.54 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 30.69 சதவீதம் அதிகம். மொத்த கார்ப்பரேட் வரி மற்றும் தனிநபர் வருமான வரி (பிஐடி) வசூல் முறையே 22.03 சதவீதம் மற்றும் 40.64 சதவீதம் அதிகரித்துள்ளது.’ என அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | பான் கார்டு பயனாளர்கள் இந்த தவறை செய்தால் ரூ.10,000 அபராதம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ