ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியரா நீங்கள்? இது உங்களுக்கு தேவைபப்டும் செய்தியாக இருக்கலாம். நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியராக இருந்து, பான் கார்டு வைத்திருந்தால், வருமான வரி கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டுமா இல்லையா என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கக்கூடும். இது குறித்த குழப்பம் அமீரகத்தில் இருக்கும் பெரும்பாலான என்ஆர்ஐ-களுக்கு உள்ளது. இது பற்றிய ஒரு அலசலை இந்த பதிவில் காணலாம்.
பான் கார்டு வைத்திருக்கும் என்ஆர்ஐ-கள் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டுமா?
இந்தியாவில் வரிக்குட்பட்ட வருமானம் இல்லை என்றால் வருமான வரிக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்ற பொதுவான தவறான புரிதல் உள்ளது. ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி ஏதும் இல்லாவிட்டாலும் சில சூழ்நிலைகளில் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும் (குறிப்பு: வருமான வரி விதி 12AB).
இதற்கான சில முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்:
- எடுத்துக்காட்டாக, என்ஆர்ஐயின் சேமிப்பு வங்கிக் கணக்கில் (என்ஆர்இ/என்ஆர்ஓ கணக்கு உட்பட) ஒரு நிதியாண்டின் மொத்த வைப்புத்தொகை (டெபாசிட்) ரூ. 5 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தால், அவர்/அவள் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த டெபாசிட்டுகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பணம் அனுப்புதல் அல்லது இந்தியாவில் சொத்து விற்பனை போன்ற எந்தவொரு மூலத்திலிருந்தும் செய்யப்பட்டிருக்கலாம்.
- வருமான மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (டிடிஎஸ்) ரூ.25,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் சூழ்நிலையிலும் வரிக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். என்ஆர்ஓ கணக்கில் டிடிஎஸ் 30 சதவீதம் கழிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரிக் கணக்கைச் சமர்ப்பிக்காமல், வரி திரும்பப் பெறாமல் அரசுக்கு கூடுதல் பணம் செலுத்துவதாக என்ஆர்ஐக்கள் நம்புகின்றனர். இருப்பினும், 'தீங்கு இல்லை, தவரு இல்லை' ( நோ ஹார்ம், நோ ஃபவுல்) தத்துவம் இங்கு எடுபடாது.
மேலும் படிக்க | NRI ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமா? முழு செயல்முறை இதோ
- ஒரு NRI ஒரு சொத்தை ரூ. 250,000க்கும் அதிகமான மதிப்புக்கு விற்றிருக்கிறார் என வைத்துக்கொள்ளலாம். விற்பனைத் தொகையை மற்றொரு அசையாச் சொத்து அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிகளில் மீண்டும் முதலீடு செய்வதன் மூலம் அவர்/அவள் வரியைச் சேமிக்க முடியும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வருமான வரி செலுத்தப்படாவிட்டாலும், வரி விலக்குகளுக்கு முந்தைய மொத்த வருமானம் ரூ. 250,000 வரம்பைத் தாண்டியிருப்பதால், வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
- இதேபோல், வெளிநாட்டு பயணச் செலவுகளின் சில சந்தர்ப்பங்களில், வருமான வரி ரிட்டன் கட்டாயமாக இருக்கலாம்.
வருமான வரிக் கணக்கை சமர்ப்பிப்பதில் இருந்து NRI களுக்கு எப்போது விலக்கு அளிக்கப்படுகிறது?
- ஒரு என்ஆர்ஐ-ன் இந்திய ஆதார வருமானம் பூஜ்ஜியமாகவோ அல்லது 250,000 ரூபாய்க்கு குறைவாகவோ இருந்தால், வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
- மேலும், ஒரு என்ஆர்ஐயின் இந்திய வருமானம், ரூ. 250,000க்கு மேல் இருந்தாலும், சில குறிப்பிட்ட அம்சங்களை மட்டுமே கொண்டிருந்தாலும், அதற்குப் போதுமான வரிகள்/டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், வரிக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. பரிந்துரைக்கப்பட்ட அம்சங்களில் ஈவுத்தொகை, குறிப்பிட்ட பத்திரங்கள் (பாண்டுகள்) மற்றும்/அல்லது கடன் நிதிகளிலிருந்து (டெப்ட் ஃபண்டுகள்) பெறப்பட்ட வட்டி வருமானம், வெளிநாட்டு நாணயத்தில் வாங்கப்பட்ட மியூசுவல் ஃபண்டுகள் ஆகியவை அடங்கும்.
- இருப்பினும், பரிந்துரைக்கப்பட்ட அம்சங்களைத் தவிர, சேமிப்புக் கணக்கு அல்லது நிலையான வைப்புத்தொகை மீதான வட்டி போன்ற பிற வருமானங்கள் இருந்தால், வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டி வரலாம்.
வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்காததற்கு விதிக்கப்படும் அபராதம் என்ன?
மொத்த வரிவிதிப்பு வருமானம் 500,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்காததற்கான அபராதம் 5,000 ரூபாய் ஆகும். இல்லையெனில், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் படிக்க | ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய NRI-கள் தேர்ந்தெடுக்கும் டாப் நகரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ