Budget 2025, Agriculture Sector: 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் 2025 வரும் பிப். 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பு நாள் நெருங்க நெருங்க அதிகரித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது நிதி அமைச்சகம் 2025-26 நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வரும், எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட இருக்கிறது என்ற ஆர்வம் அனைவர் மத்தியிலும் இருக்கிறது.


Budget 2025: விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு 12% உயர வாய்ப்பு 


அதிலும் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்களிக்கும் விவசாய துறைக்கும் பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. நாட்டின் விவசாயம் மற்றும் அதுசார்ந்த திட்டங்களுக்கு வரும் 2025-26 பட்ஜெட்டில் ரூ.1.70 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, பட்ஜெட்டில் விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு 12% உயர இருப்பதாக கூறப்படுகிறது.


Budget 2025: கடந்தாண்டை போல இந்தாண்டும்...


கடந்தாண்டு இரண்டு பட்ஜெட்கள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்தாண்டு பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் மக்களவை தேர்தலுக்கு பின் மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், ஜூலை மாதம் 23ஆம் தேதி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் விவசாய துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


மேலும் படிக்க | Budget 2025.... வருமான வரி விலக்கு அதிகரிக்கப்படுமா... வரி செலுத்துவோருக்கு காத்திருக்கும் குட் நியூஸ்?


கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், விவசாயத்துறை முன்னேற்றத்திற்கு பல முன்னெடுப்புகள் கொண்டு வரப்பட்டன. விவசாயத்தில் உற்பத்தித்திறன் மற்றும் மீள்தன்மை என்பதே, கடந்த 2024 பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்த 9 அம்ச முன்னுரிமைப் பட்டியிலில் முதல் அம்சமாக இடம்பெற்றிருந்தது.  


அந்த வகையில், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 400 மாவட்டங்களில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி காரீஃப் விளைபொருட்களுக்கான டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவை அடைவதற்கான சிறப்பு வியூகம், இறால் குஞ்சுகளுக்கான கரு இனப்பெருக்க மையங்களை அமைப்பதற்கான நிதி உதவி உள்ளிட்டவை முக்கிய திட்டங்களாகும்.


Budget 2025: இந்தாண்டு வர உள்ள திட்டங்கள்


எனவே கடந்தாண்டை போலவே இந்தாண்டும் மத்திய அரசு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அதிகமாக கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கிசான் கடன் அட்டைகள் மற்றும் பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் ஆகிய திட்டங்களை விரிவுப்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 


வரும் பட்ஜெட்டில், பால்வளத்துறை மற்றும் மீன்வளத்துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகரமான மற்றொரு தகவலும் கிடைத்திருக்கிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.


Budget 2025: அதிகரிக்கப்படும் பிரதமர் கிசான் ஊக்கத்தொகை?


அதாவது தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் ரூ.2 ஆயிரம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறது. தற்போது இந்த தொகை ஆண்டுக்கு ரூ.8 ஆயிரமாக உயர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 


2024-25 நிதியாண்டில் மத்திய பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டும் ரூ.1.06 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ.1,51,851 கோடி விவசாயம் மற்றும் அதுசார்ந்த செயல்பாடுகளுக்கு ஒதுதக்கப்பட்டது. இது கடந்த 2023-24 நிதியாண்டின் ஒதுக்கீட்டை ஒப்பிடும்போது 8.1% சதவீதம் அதிகமாகும். 2023-24 பட்ஜெட்டில் ரூ.1,25,875 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 


மேலும் படிக்க | மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு சலுகை! இவற்றை எதிர்பார்க்கலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ