Bank MCLR Rates 2023: அரசு மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. உங்களிடம் வங்கிக் கணக்கு இருந்தால், இப்போது நீங்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஐசிஐசிஐ வங்கியும், பஞ்சாப் நேஷனல் வங்கியும் MCLR (marginal cost-based lending rates) விகிதத்தை மாற்றியமைத்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் EMI தொகையில் மாற்றம் ஏற்படும். ஐசிஐசிஐ வங்கி சில காலங்களுக்கு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது, அதே நேரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி அனைத்து காலங்களுக்கும் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.


ஐசிஐசிஐ வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது


தனியார் துறையான ஐசிஐசிஐ வங்கி குறித்து பார்த்தோமானால் இந்த வங்கி, வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்களின் EMI குறைந்துள்ளது. ஒரே இரவில் வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.35 சதவீதமாக வங்கி குறைத்திருக்கிறது. இது தவிர, 3 மாதங்களுக்கான கட்டணங்களும் 15 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் விகிதங்கள் 8.55 சதவீதத்தில் இருந்து 8.40 சதவீதமாக குறைந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி 6 மாதங்கள் மற்றும் ஒரு வருட காலத்திற்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதில், வங்கி 5 அடிப்படை புள்ளிகளை அதிகரித்துள்ளது. இதில், 8.85 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | EPS Higher Pension: அதிக ஓய்வூதியம் குறித்து அரசு அளித்த பெரிய அப்டேட்


புதிய கட்டணங்கள் அமல்


நாட்டின் அரசு வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கி அனைத்து காலகட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த வங்கி MCLR விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. வங்கியின் புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, வங்கி ஒரே இரவில் MCLR விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகளாக அதிகரித்துள்ளது, அதன் பிறகு வட்டி விகிதம் 8 முதல் 8.10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 


இது தவிர, ஒரு மாதம், 3 மாதங்கள் மற்றும் 6 மாதங்களுக்கான கட்டணங்களும் அதிகரித்துள்ளது. ஒரு மாத வட்டி விகிதம் 8.20 சதவீதமாகவும், 3 மாத வட்டி விகிதம் 8.30 சதவீதமாகவும், 6 மாத வட்டி விகிதம் 8.50 சதவீதமாகவும் மாறியுள்ளது. இது தவிர, ஓராண்டுக்கான MCLR விகிதம் 8.60 சதவீதமாகவும், 3 ஆண்டு எம்சிஎல்ஆர் விகிதம் 8.90 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, வெவ்வேறு காலகட்டங்களின் வட்டி விகிதங்களை பார்க்கும்போது, உங்கள் EMI நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இனிமேல் அதிக பணம் செலவழிக்க வேண்டி வரும். இது தவிர, ஐசிஐசிஐ வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது, எனவே உங்கள் EMI குறையும். 


மேலும் படிக்க | மூத்த குடிமக்கள் கவனத்திற்கு... இந்த 3 வங்கிகளில் FD வட்டி விகிதம் அதிகம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ