மூத்த குடிமக்கள் கவனத்திற்கு... இந்த 3 வங்கிகளில் FD வட்டி விகிதம் அதிகம்!

FD Interst Rate For Senior Citizen: எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் சிறப்பு FD திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 2, 2023, 05:51 PM IST
  • வங்கிகள் பரந்துபட்ட அளவில் FD திட்டங்களை வழங்குகின்றன.
  • FD திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது.
  • SBI Amrit Kalash FD திட்டத்தில் 400 நாள்கள் சிறப்பு தவணைக்காலத்துடன் வருகிறது.
மூத்த குடிமக்கள் கவனத்திற்கு... இந்த 3 வங்கிகளில் FD வட்டி விகிதம் அதிகம்! title=

FD Interst Rate For Senior Citizen: வங்கிகளில் அளிக்கப்படும் நிலையான வைப்புத்தொகை (FD) திட்டங்கள் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான சிறந்த முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தபால் அலுவலகங்களிலும் இத்தகைய திட்டங்கள் இருந்தாலும், வங்கிகள் பரந்துபட்ட அளவில் FD திட்டங்களை வழங்குகின்றன. 

பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா போன்ற பல வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு 50 அடிப்படை புள்ளிகளை (bps) வழங்குகின்றன. இந்த சிறப்பு FD திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

எஸ்பிஐ

பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் சிறப்பு திட்டமான வீ கேர், மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கான நிலையான வைப்புத்தொகை திட்டங்களில் கூடுதல் 30 bps வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒரு மூத்த குடிமகன் சிறப்பு FD திட்டத்தின் கீழ் நிலையான வைப்புத்தொகையை வைத்தால், FD திட்டத்துக்கு பொருந்தும் வட்டி விகிதம் 7.50 சதவீதமாக இருக்கும். 

மேலும் படிக்க | 7th Pay Commission 46% டிஏ ஹைக் உறுதி: வந்தது அதிரடியான அப்டேட்!!

இந்த வட்டி விகிதங்கள் கடந்த பிப். 23ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. SBI Amrit Kalash FD திட்டம் 400 நாட்கள் சிறப்பு தவணைக்காலத்துடன் வருகிறது. இதில் பொதுமக்கள் 7.10 சதவீதம் வட்டி விகிதத்தைப் பெறுவார்கள் மற்றும் மூத்த குடிமக்கள் 7.60 சதவீதம் வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.

ஹெச்டிஎப்சி

ஹெச்டிஎப்சி வங்கியின் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம், ஹெச்டிஎப்சி மூத்த குடிமக்கள் பராமரிப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த டெபாசிட்டுகளுக்கு வங்கி 75 bps அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. வங்கியின் இணையதளத்தின்படி, மூத்த குடிமக்கள் பராமரிப்பு FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 7, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கு 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை 7.75 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த விகிதங்கள் கடந்த மே 29ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இது தவிர, மூத்த குடிமக்களுக்கு முறையே 7.70 சதவீதம் மற்றும் 7.75 சதவீதம் வட்டி விகிதங்களை வழங்கும், 35 மற்றும் 55 மாதங்கள் கொண்ட இரண்டு சிறப்பு பதிப்பு FD திட்டங்களை ஹெச்டிஎப்சி வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐசிஐசிஐ

மூத்த குடிமக்களுக்கான ஐசிஐசிஐ வங்கியின் சிறப்பு FD திட்டம் , ஐசிஐசிஐ வங்கி கோல்டன் இயர்ஸ் FD திட்டம் 80 bps அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஐசிஐசிஐ வங்கியின் கோல்டன் இயர் எஃப்டி திட்டமானது ஆண்டுக்கு 7.50 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் கடந்த பிப். 24ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. 

மேலும் படிக்க | பசுமை டெபாசிட் குறித்து தெரியுமா? - இன்று முதல் வரும் மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News