ஓய்வூதியர்களுக்கு Good News.... இனி வீட்டிலிருந்தே உயிர்வாழ் சான்றிதழை பெறலாம்..!!!
ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அரசின் கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும். அரசின் சேவை மையங்கள், வங்கிகள், ஆகியவற்றில் இந்த மின்னணு சான்றிதழ் (Digital Life Certificate) தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அரசின் கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும். அரசின் சேவை மையங்கள், வங்கிகள், ஆகியவற்றில் இந்த மின்னணு சான்றிதழ் (Digital Life Certificate) தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இது மிகவும் வயதானவர்களுக்கு எப்போதுமே ஒரு பிரச்சனை தான். நேரில் போய் சான்றிதழ் பெறுவதில் தொடர்ந்து சிக்கலை எதிர்கொள்கிறார்கள். இப்போது கொரோனா வைரஸ் (Corona Virus) காரணமாக பிரச்சனை இன்னும் அதிகமாகியுள்ளது என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில், மத்திய அரசு (Central Government), ஓய்வூதியர்களுக்கு மின்னணு உயிர்வாழ் சான்றிதழை, வீடுகளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்து உள்ளது. இந்த சேவை போஸ்ட் ஆபீஸ் மூலம் வழங்கப்படும்.
மத்திய அரசின் ஜீவண் பிரமான் திட்டத்தின் கீழ், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலமாக, மின்னணு உயிர் வாழ் சான்றிதழை, ஓஉவூதியம் பெறுபவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
ஓய்வூதியர்கள் தங்கள் பகுதியில் உள்ள தபால்காரரிடம் ஆதார் (aadhaar) , செல்போன் எண், ஓய்வூதிய கணக்கு எண் ஆகியவற்றை தெரிவித்து, பயோ மெட்ரிக் (Bio-Metric) முறையில் கைவிரல் ரேகை பதிவு செய்தால், சில நிமிடங்களில் மின்னணு உயிர்வாழ் சான்று கிடைக்கும். இதற்கான சேவை கட்டணமாக ரூ.70 வசூலிக்கப்படும்.
ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுடைய மின்னணு உயிர்வாழ் சான்றிதழை, jeevanpramaan.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஓய்வூதியர்கள் அனைவரும் தபால்துறையின் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க, வரும் டிசம்பர் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | தீராத பிரச்சனையா... வீட்டின் படிக்கட்டு காரணமாக இருக்கலாம்... !!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR