New Pension Scheme: குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட வருவாயைப் பெறக்கூடிய ஒரு ஓய்வூதிய திட்டத்தை வடிவமைப்பதில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து PFRDA தலைவர் தீபக் மொகந்தி விரிவாக தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து மேலும் அவர்," இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். அடல் பென்ஷன் யோஜனா (APY) சந்தாதாரர்களின் எண்ணிக்கை சுமார் 5.3 கோடியை எட்டியுள்ளது. இந்  ஆண்டு, 1.3 கோடி பேரை அடல் பென்ஷன் திட்டத்தில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 1.2 கோடி பேர் இத்திட்டத்தில் இணைந்தனர்" என்றார்.


புதிய தயாரிப்பு 


PFRDA என்பது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கட்டுப்பாட்டாளராகும். புதிய ஓய்வூதிய திட்டம் 20004ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அரசு மற்றும் அரசு அல்லாத அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டது.


ஓய்வூதியத்தின் மூலம் குறைந்தபட்ச வருவாய்க்கான பணிகள் நடைபெற்று வருவதாக மொகந்தி தெரிவித்தார். "நாம் ஓய்வூதியம் மீதான ரிஸ்க் மற்றும் ரிட்டர்ன் (வருவாய்) ஆகியவற்றை சமன் செய்ய வேண்டும். யாராவது இதன்மீது உறுதி அளித்தால், பின் அவர் அனைத்திற்கும் பொறுப்பாக இருப்பார். உறுதியளிக்கப்பட்ட வருமானத்திற்கு, ஓய்வூதிய நிதி அதிக மூலதனத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.  ஏனெனில் அது திட்டத்தை மீதான ரிஸ்க்கை அதிகரிக்கும். அத்தகைய தயாரிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். அதை பரிசீலித்து வருகிறோம். இந்த திசையில் நாமும் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளோம். இந்த தயாரிப்பை நாங்கள் விரைவில் கொண்டு வருவோம், மேலும் அதன் வருமானம் கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும் என்பதையும் கணக்கில் கொண்டுள்ளோம்.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு அருமையான அறிவிப்பு... ஓய்வூதியம் வரம்பை குறைத்த மாநில அரசு!


அடல் ஓய்வூதியத் திட்டத்தின் வருமானம்


அடல் பென்ஷன் யோஜனா 9% வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த திட்டத்திற்கான நிதி இடைவெளியை ஏற்பாடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வூதிய முறையை மறுபரிசீலனை செய்வதற்காக நிதித்துறை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு குறித்தும் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதுபற்றி எதுவும் தற்போது கூற இயலாது எனவும் மிக விரைவில் தகவல் தெரிவிப்போம் என்றார். இந்த குழுவில் மொகந்தி உறுப்பினராக உள்ளார். புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான பலன்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தக் குழு பரிந்துரைக்கும். 


பழைய ஓய்வூதிய திட்டம்


பல மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற ஊழியர்களின் கோரிக்கையை அடுத்து இந்தக் குழு அமைக்கப்பட்டது. பாஜக அல்லாத சில மாநிலங்கள் அகவிலைப்படி இணைக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. இதற்குப் பிறகு, வேறு சில மாநிலங்களிலும் அதன் தேவையை அதிகரித்துள்ளது. இருப்பினும், இது தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், பட்ஜெட்டில் அதன் தாக்கத்தை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.


NPS கார்பஸ்


புதிய ஓய்வூதிய திட்டம் கார்பஸைத் திருப்பித் தர வேண்டும் என்ற மாநிலங்களின் கோரிக்கையின் பேரில், இந்த பணம் பங்களிப்பாளர்களுக்கு சொந்தமானது என்பதால், ஓய்வூதியத் தொகையைத் திரும்பப் பெற சட்டத்தில் எந்த விதியும் இல்லை என்று மொகந்தி கூறினார். புதிய ஓய்வூதிய திட்டத்தின் கார்பஸைத் திரும்பப் பெறுவதற்கு PFRDA சட்டத்தில் எந்த விதியும் இல்லை என்று மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் கூறியது. குறிப்பாக, இந்தக் கோரிக்கை பாஜக ஆட்சி செய்யாத 5 மாநிலங்களின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையாகும். பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்த விரும்புவதால், இந்தப் பணத்தை ஊழியர்களுக்கே திருப்பித் தர வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க | EPS Higher Pension: அதிக ஓய்வூதியம் குறித்து அரசு அளித்த பெரிய அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ