PMGKAY 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு! பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்
Free food grains: நாடு தழுவிய அளவில் NFSA திட்டம் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய உணவு தானியங்கள் இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ், ஜனவரி 1, 2023 முதல் ஒரு வருட காலத்திற்கு 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. NFSA இன் கீழ், கிராமப்புற மக்களில் 75 சதவிகிதம் மற்றும் நகர்ப்புற மக்களில் 50 சதவிகிதம் வரை இரண்டு திட்டங்களால் பயனடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் 2023 ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி ஓராண்டு காலத்திற்கு 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்குவதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் துர்க் நகரில் நடைபெற்ற பொது பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தனது அரசின் இலவச ரேஷன் திட்டமான PMGKAY அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. தற்போது ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருவதால், இதுபோன்ற அறிவிப்புகள் எதையும் மத்திய மாநில அரசுகள் வெளியிடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
“அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்கள் மற்றும் *PMGKAY* இன் கீழ் உள்ள முன்னுரிமை குடும்பங்களுக்கு (PHH) 1 ஜனவரி 2023 முதல் ஒரு வருட காலத்திற்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்குகிறது. 2020 இல் தொடங்கப்பட்ட PMGKAY திட்டத்தின் கீழ், கூடுதல் உணவு தானியங்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பரில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA)கீழ் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
NFSA இன் கீழ், கிராமப்புற மக்களில் 75 சதவீதம் பேர் மற்றும் நகர்ப்புற மக்களில் 50 சதவீதம் பேர் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்பங்கள் என இரண்டு பிரிவுகளின் கீழ் பயனடைகின்றனர்.
ஏழைகளில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள AAY குடும்பங்கள், ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியங்களைப் பெறும் உரிமையைப் பெற்றாலும், முன்னுரிமை குடும்பங்களில் ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ என்ற விகிதத்தில் தானியங்கள் வழங்கப்படும்.
ஏழைப் பயனாளிகளின் பணப் பிரச்சனைக்கு தோள் கொடுக்க, நாடு தழுவிய அளவில் NFSA திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக உணவு தானியங்கள் இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏழைகளுக்கு மலிவான விலையில் உணவு தானியங்கள் கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் NFSA இன் விதிகளை வலுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசின் உணவு அமைச்சகம் (food ministry) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் கூறியது.
என்.எஃப்.எஸ்.ஏ (NFSA (One Nation -One Price -One Ration)) திறம்பட மற்றும் சீரான முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
"எப்சிஐக்கு உணவு மானியம் மற்றும் பரவலாக்கப்பட்ட கொள்முதலுக்கான உணவு மானியம் (Food Subsidy to Decentralized Procurement (DCP) ஆகிய இரண்டு உணவு மானியத் திட்டங்களின் உதவியுடன் மாநிலங்களில் உணவு தானியங்களை கொள்முதல் செய்தல், ஒதுக்கீடு செய்தல், கொண்டு செல்வது மற்றும் உணவு மானியத்தை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொள்கிறது" என்று உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | பிஎஃப் கணக்கில் அதிரடி ஏற்றம், வந்தது கூடுதல் தொகை: இப்படி செக் பண்ணுங்க
இந்த இரண்டு உணவு மானியத் திட்டங்களும், NFSA-ஐ திறம்பட மற்றும் சீரான முறையில் செயல்படுத்துவதற்காகவும், நாட்டில் உணவு பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்காகவும், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா (PMGKAY) திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
"இந்த திட்டத்தின் கீழ், 2023 ஜனவரி 1 முதல் இலக்கு பொது விநியோக முறை (Targeted Public Distribution System (TPDS)) மூலம் இலவச உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகின்றன. NFSA பயனாளிகளுக்கு உணவு தானியங்களை இலவசமாக தயாரிப்பதற்கான கூடுதல் செலவை இந்திய அரசு ஏற்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
NFSA 2013 கிராமப்புற மக்கள் தொகையில் 75% மற்றும் நகர்ப்புற மக்கள் தொகையில் 50% வரை பாதுகாப்பு வழங்குகிறது, இது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 81.35 கோடி நபர்களுக்கு வருகிறது.
"சமூகத்தில் அனைவரும் பசியின்றி வாழவும், உணவு தானியங்கள் தேவைப்படுபவர்கள் அதனைப் பெறுவதை உறுதிசெய்வதற்காக, 80.48 கோடி பயனாளிகள் சட்டத்தின் கீழ் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | மீண்டும் பழைய ஓய்வூதியம்!! ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஜாக்பாட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ