ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை:  வாழ்வின் பல வித தேவைகளுக்காக வங்கிகளில் கடன் வாங்கி உள்ளவர்களுக்கு நல்ல செய்தி. வங்கிகள் மூலம் வட்டி உயர்த்தப்படுவதை குறித்து நீங்கள் கவலையில் இருந்தால், உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. இந்தச் செய்தி உங்களுக்கு நிம்மதியைத் தரும். அதுமட்டுமல்லாமல், வீட்டுக் கடன் அல்லது கார் கடன் வாங்க திட்டமிட்டிருக்கும் நபர்களுக்கும் இந்த செய்தி மகிழ்ச்சியைத் தரும். இஎம்ஐ செலுத்தும் நபர்களின் முகத்திலும் இது சிரிப்பை கொண்டு வரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

44வது நிதிக் கொள்கை மீளாய்வுக் கூட்டத்தில் (எம்பிசி கூட்டம்) இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஏப்ரல், ஜூன் மாதங்களைத் தொடர்ந்து தற்போது ஆகஸ்டிலும் மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை பழைய நிலையிலேயே வைத்திருக்கிறது. ஜூன் மாதத்தில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.5 சதவிகிதம் என்ற அதே அளவில் வைத்தது. தற்போது மீண்டும் அதே அளவே நீட்டிக்கப்பட்டுள்ளது. 


வியாழக்கிழமை, அதாவது இன்று நடைபெற்ற எம்பிசி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒருமித்த கருத்துடன் ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகத் தக்கவைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். முன்னதாக, அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை இரண்டரை சதவீதம் உயர்த்தியது. ரெப்போ விகிதத்தில் இந்த மாற்றம் மே 2022 முதல் மார்ச் 2023 வரை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு, மே 2022 வரை ரெப்போ விகிதம் 4 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது அதன் விகிதம் 6.5 சதவீதமாக உள்ளது.


EMI இல் எந்த பாதிப்பும் ஏற்படாது


ரிசர்வ் வங்கி தொடர்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதாவது, ரெப்போ விகிதம் பழைய நிலையிலேயே உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லாததால், கடன் வாங்கியுள்ளவர்களின் EMI பழைய நிலையிலேயே இருக்கும். இருப்பினும், வரும் காலங்களில், நிலையான வைப்பான எஃப்டி -இன் வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம். ரெப்போ விகிதம் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது உச்சத்தில் உள்ளது என்பது குறிப்பிடதத்க்கது. கடந்த ஆண்டு, அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வட்டி விகிதத்தை அதிகரிக்கும் பணியை, ரிசர்வ் வங்கி துவக்கியது. இதற்குப் பிறகு பணவீக்க விகிதத்தில் சரிவு காணப்பட்டது.


மேலும் படிக்க | தங்கம் வாங்க காத்திருப்போருக்கு டபுள் ஜாக்பாட்! விலையில் பெறும் வீழ்ச்சி


யாருக்கு நிவாரணம் கிடைக்கும்?


 ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் வங்கியில் கடன் வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு நன்மை கிடைக்கும். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து வங்கிகள் எந்த வகையான கடனுக்கான வட்டி விகிதத்தையும் அதிகரிக்காது. ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தினால், அது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் கடன்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.


ரெப்போ விகிதம் என்றால் என்ன?


வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் விகிதம் ரெப்போ ரேட் எனப்படும். ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டியும் அதிகரிக்கும். இதன் விளைவாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடன்களின் விகிதமும் உயர்த்தப்படும். இதன் தாக்கம் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதங்களில் தெரியும். இது கடன் வாங்கியுள்ள வங்கி வாடிக்கையாளர்களின் இஎம்ஐ மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | SIP முதலீடுகளில் வரலாறு காணாத லாபம்! சூப்பர் வருமானத்துக்கு காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ