ரூ.500 நோட்டு பற்றிய முக்கிய செய்தி: ரிசர்வ் வங்கி அளித்த அப்டேட்... அலர்ட் மக்களே!!

RBI on Rs. 500 Note: சமீபத்தில் 500 ரூபாய் நோட்டு தொடர்பான ஒரு செய்தி வைரலாக பரவியது. இது குறித்த விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கி முன்வர வேண்டிய நிலையும் ஏற்பட்டது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 16, 2023, 11:27 AM IST
  • ரிசர்வ் வங்கி கூறியது என்ன?
  • நோட்டில் உள்ள நட்சத்திரக் குறியின் பொருள் என்ன?
  • போலி நோட்டுகளை அடையாளம் காண்பது எப்படி?
ரூ.500 நோட்டு பற்றிய முக்கிய செய்தி: ரிசர்வ் வங்கி அளித்த அப்டேட்... அலர்ட் மக்களே!! title=

500 ரூபாய் நோட்டு, சமீபத்திய புதுப்பிப்பு: 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வந்தது முதல், இன்னும் பல ரூபாய் நோட்டுகள் பற்றிய பல வித செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக 500 ரூபாய் நோட்டு பற்றி பல வதந்திகள் கிளம்பியுள்ளன. எனினும், மக்கள் அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்து வரும் அறிவிப்புகள் மற்றும் செய்திகளைத் தான் நம்ப வேண்டும் என்றும் ஆதாரமற்ற வதந்திகளை நம்பக்கூடாது என்றும் இந்திய அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

அந்த வகையில், சமீபத்திலும் 500 ரூபாய் நோட்டு தொடர்பான ஒரு செய்தி வைரலாக பரவியது. இது குறித்த விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கு முன்வர வேண்டிய நிலையும் ஏற்பட்டது.  ‘ஸ்டார் மார்க்' (*) கொண்ட நோட்டின் செல்லுபடியாகும் தன்மை குறித்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும் அனைத்து அச்சங்களையும் வதந்திகளையும் ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது. இந்நிலையில், தொடரின் நடுவில் நட்சத்திரம் உள்ள நோட்டை நீங்கள் பெற்றிருந்தால், மற்ற நோட்டுகளைப் போலவே இந்த நோட்டும் செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி கூறியது என்ன? 

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறாக அச்சிடப்பட்ட நோட்டுக்குப் பதிலாக வெளியிடப்படும் நோட்டின் நம்பர் பேனலில் நட்சத்திரக் குறி சேர்க்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது. இந்த நட்சத்திரக் குறியைப் பார்த்து, சிலர் அதை மற்றொரு 500 ரூபாய் நோட்டுடன் ஒப்பிட்டு, இது போலி அல்லது சட்டவிரோதமான நோட்டு என்று கூறினர். இந்த வதந்தி வைரலாக பரவவே, அதை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொண்டு இந்த தகவலை அளித்துள்ளது. 

மேலும் படிக்க | Zomato-வில் உணவு ஆர்டர் செய்வோர் கவனத்திற்கு! இனி கூடுதல் கட்டணம்!

வரிசை எண்கள் கொண்ட நோட்டுக் கட்டுகளில் தவறாக அச்சிடப்பட்ட நோட்டுகளுக்குப் பதிலாக நட்சத்திரக் குறி கொண்ட நோட்டுகள் வெளியிடப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பின் எண் மற்றும் அதற்கு முன் உள்ளிட வேண்டிய எழுத்துக்களுக்கு இடையே இந்த நட்சத்திரக் குறி வைக்கப்படுகிறது.

நோட்டில் உள்ள நட்சத்திரக் குறியின் பொருள் என்ன?

நட்சத்திர குறியுடன் கூடிய வங்கி நோட்டு மற்ற சட்டப்பூர்வ டெண்டர்களைப் போன்றது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. அதன் நட்சத்திரக் குறியானது, மாற்றப்பட்ட அல்லது மறுபதிப்பு செய்யப்பட்ட நோட்டுக்குப் பதிலாக வெளியிடப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. நோட்டுகளை அச்சிடுவதை எளிதாக்கவும், செலவைக் குறைக்கவும் நட்சத்திர நோட்டுகளின் போக்கு 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ரிசர்வ் வங்கி தவறாக அச்சிடப்பட்ட நோட்டுக்குப் பதிலாக அதே எண்ணின் சரியான நோட்டைப் பயன்படுத்தி வந்தது.

கூடுதல் தகவல்

போலி நோட்டுகளை அடையாளம் காண்பது எப்படி? 

புதிய 500 நோட்டை அடையாளம் காண ரிசர்வ் வங்கி தனது வழிகாட்டுதலில் வெளியிட்டது. சில நாட்களுக்கு முன்பு 500 ரூபாய் நோட்டு போலியானது என்று ஒரு செய்தியில் கூறப்பட்டது, அதில் பச்சை நிற கோடு, ரிசர்வ் வங்கியின் ஆளுநரின் கையெழுத்துக்கு அருகில் இல்லாமல் காந்திஜியின் படத்திற்கு அருகில் இருந்ததாக கூறியிருந்தது. இதுகுறித்து விவரித்த PIB, இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும் என்று ட்வீட் செய்தது. மேலும் RBI ஒரு PDF ஐப் பகிர்ந்துள்ளது, இது சாதாரண குடிமகனுக்கு உண்மையான மற்றும் போலி ரூ.500 நோட்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறிய உதவும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் எவ்வளவு? 3% அல்லது 4%? இதன் பின் உள்ள கணக்கீடு என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News