State Government Employees DA Hike News: தமிழக அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் நல்ல செய்தி மிக விரைவில் வரவுள்ளதாகத் தெரிகிறது. அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் ஊழியர்கள் இன்னும் சில நாட்களில் அதற்கான அறிவிப்பை பெறக்கூடும். இது குறித்த சமீபத்திய புதுப்பித்தல்களை இங்கே காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு அலுவலர் ஒன்றியம் வைத்த கோரிக்கை


சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களை போல மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை அதிகரிக்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.  தமிழக அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என அனைவருக்குமான டிஏ -வை 53% ஆக உயர்த்த வேண்டும் என ஒன்றியம் மாநில அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 



 தீபாவளிக்கு முன் வருமா நல்ல செய்தி?


தமிழக அரசு அகவிலப்படியை தீபாவளிக்கு முன்னர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால், தீபாவளி பண்டிகைக்கான செலவுகளில் பணியாளர்களுக்கு பெரிய உதவி கிடைக்கும். அகவிலைப்படி 3% அதிகரித்து அதன் மூலம் மொத்த அகவிலைப்படி 53% அதிகரித்தால், மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய எற்றம் இருக்கும்.


இதுமட்டுமல்லாம, ஜூலை மாதன் முதலான டிஏ அரியர் (DA Arrears) தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும். இது நிதி ரீதியாக பணியாளர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளிக்கும். அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு அரசு ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை கூடுதல் மகிழ்ச்சியோடு கொண்டாட உதவும். 


மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: காப்பீட்டு நன்மைகள்... அமைச்சர் அளித்த அட்டகாசமான தகவல்


7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள்


முன்னதாக, அக்டோபர் 16 ஆம் தேதி, 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை அரசு 3% அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 53% ஆக உயர்ந்துள்ளன. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


மாநில அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு அறிவிப்பு எப்போது?


தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தமிழக முதலைச்சர் முக ஸ்டாலினுக்கு அவர் ஒரு கோரிக்கை மனுவை எழுதியுள்ளார். இதில் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழக அரசு அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடக்கூடும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், மழை பாதிப்புக்கான நிவாரண பணிகளை தமிழக அரசு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் அகவிலைப்படி குறித்த ஆலோசனை கூட்டத்தை நடத்தி இதற்கான அறிவிப்பை வெளியிடக்கூடும். எப்படியும் தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த நல்ல செய்தி கிடைக்கும் என நம்பப்படுகின்றது. 


மேலும் படிக்க | அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி? மீண்டும் ஒரு குட் நியூஸ்? அரசு வைத்த ட்விஸ்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ