அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான நிதியாண்டு 3-ல் வட்டி விகிதம் என்ன? தெரிந்துக்கொள்ளுங்கள்
இரண்டாம் காலாண்டில் இருந்ததை போலவே காலாண்டு -3 (அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்) க்கான தபால் அலுவலக திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அப்படியே உள்ளது. பிரபலமான சில சேமிப்பு திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
Post Office Small Saving Schemes: கோவிட் -19 (Covid-19) தாக்கத்தை குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) முக்கிய வட்டி கொள்கை விகிதங்களை குறைத்து வருகிறது. மேலும், பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் வைப்புத் திட்டங்களுக்கான (Deposits schemes) வட்டி விகிதங்களைக் குறைத்து வருகின்றன.
எனவே, பரவலாக எதிர்பார்க்கப்பட்டபடி, 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை (Interest Rrates) பெருமளவில் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 70 அடிப்படை புள்ளிகள் முதல் 140 அடிப்படை புள்ளிகள் (100 அடிப்படை புள்ளிகள் = 1 சதவீதம்) இடையே குறைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கான (Small Savings Schemes) வட்டி விகிதங்கள் 2020-21 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், அதாவது ஜூலை-செப்டம்பர் மாதங்களில் மத்திய அரசு எந்தவித மாற்றமும் செய்யாமல் இருக்கிறது.
ALSO READ | தபால் அலுவலகத்தின் 7 சூப்பர்ஹிட் திட்டங்கள்... இதில் கிடைக்கும் நன்மைகள் என்ன?
வட்டியில் மாற்றம் இல்லை (unchanged Interest Rrates):
இரண்டாம் காலாண்டில் இருந்ததை போலவே காலாண்டு -3 (அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்) க்கான தபால் அலுவலக திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அப்படியே உள்ளது.
சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படாததால், நீண்ட காலம் சேமிப்பு திட்டத்தில் சேந்தவர்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.
Sl.No. | Instruments | Rate of interest (01.04.2020 to 31.12.2020) | Compounding Frequency* |
01. | Post Office Savings Account | 4.0 | Annually |
02. | 1 Year Time Deposit | 5.5(Annual Interest R. 561 on Rs. 10000 deposit) | Quarterly |
03. | 2 Year Time Deposit | 5.5(Annual Interest R. 561 on Rs. 10000 deposit) | Quarterly |
04 | 3 Year Time Deposit | 5.5(Annual Interest Rs. 561 on Rs. 10000 deposit) | Quarterly |
05 | 5 Year Time Deposit | 6.7(Annual Interest R. 687 on Rs. 10000 deposit) | Quarterly |
06. | 5 Year Recurring Deposit Scheme | 5.8 Maturity value for Rs. 100 Dn. 5 Year = 6969.67 After extension with deposit. 6 Year = 8620.98 7 Year= 10370.17 8 Year= 12223.03 9Year= 14185.73 10Year=16264.76 | Quarterly |
07 | Senior Citizen Savings Scheme | 7.4(Quarterly interest Rs. 185 on Rs. 10000 deposit) | Quarterly and Paid |
08 | Monthly Income Account | 6.6(Monthly int. Rs. 55 on Rs. 10000 deposit) | Monthly and paid |
09. | National Savings Certificate | (VIII Issue) 6.8(Maturity Value Rs. 1389 for Rs.1000 deposit) Accrued Interest for IT purpose for Rs. 1000 Dn. 1stYear= Rs.68.00 2ndYear=Rs.72.62 3rd Year=Rs.77.56 4th Year=Rs.82.84 5th Year=Rs.88.47 | Annually |
10. | Public Provident Fund Schem | 7.1 | Annually |
11. | Kisan Vikas Patra | 6.9 (will mature in 124 months) | Annually |
12. | Sukanya Samriddhi Account Scheme | 7.6 | Annually |
ALSO READ | Post office double benefit திட்டம்: கணவன் மனைவி joint account-ல் இத்தனை நன்மைகளா!!
தேசிய சேமிப்பு திட்டங்கள் (National Savings Schemes in India):
தேசிய சேமிப்பு திட்டங்கள் (National Savings Schemes) இந்தியாவில் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். இவை நிதி அமைச்சகத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. நல்ல வட்டி மற்றும் சேமிப்பு என முதலீடுகளுக்கு முழுமையான பாதுகாப்பை அவை வழங்குகின்றன.
இந்தத் திட்டங்கள் முக்கியமாக புவியியல் ரீதியாக அணுக முடியாத பகுதிகளில் நிதி சேர்க்கும் கருவிகளாகவும் செயல்படுகின்றன, ஏனெனில் அவை முதன்மையாக தபால் அலுவலகங்கள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. அவை சிறு கிராமம் என தொலைதூரத்தை எட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
என்எஸ்எஸ் கீழ் வரும் மிகவும் பிரபலமான சில திட்டங்கள்: (Very Popular Saving Schemes):
பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)
சுகன்யா சமிர்தி திட்டம் (Sukanya Samriddhi Scheme)
மாத வருமான திட்டம் (Monthly Income Scheme)
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme)
கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra)
நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட் (National Savings Certificate)
நேர வைப்பு & தொடர்ச்சியான வைப்பு (Time Deposits & Recurring Deposits)
ALSO READ | இனி தபால் அலுவலகத்தில் பான் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்... எப்படி?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR