கூகிள் பிளே இசை டிசம்பரில் மூடப்படுகிறது... அதற்க்கு பதில் யூடியூப் மியூசிக் மாற்றப்படும்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூகிள் பிளே மியூசிக்கின் (Google Play Music) சகாப்தம் இறுதியாக இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. டிசம்பர் முதல் இதற்கு மாற்றாக யூடியூப் மியூசி (YouTube Music) செயல்பட உள்ளது. கூகிள் ஏற்கனவே பிளே மியூசிக் நிறுத்தப்பட உள்ளதாகவும் அதற்கு பதிலாக யூடியூப் மியூசிக் கிடைக்கும் என்றும் அறிவித்திருந்தது. யூடியூப் மியூஸிக்கில் கூகிள் பிளே மியூசிக் தளத்தில் இருந்த அம்சங்கள் ஏற்கனவே உள்ளது.  


Google Play Music பயனர்கள் அவர்களின் இசையகத்தை யூடியூப் மியூசிக்கிற்கு மாற்றுவதற்கான ஒரு செயல்முறையையும் இது அறிமுகப்படுத்தியது. ஒரு வலைப்பதிவு இடுகையில், இந்த செப்டம்பரில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள பயனர்களுக்கான Google Play Music வேலை செய்வதை நிறுத்திவிடும் என்று யூடியூப் அறிவித்தது.


டிசம்பரில், Google Play Music உலகளவில் வேலை செய்வதை நிறுத்தும். இதன் பொருள், ஏற்கனவே உள்ள பயனர்கள் பயன்பாட்டை ஸ்ட்ரீம் செய்யவோ பயன்படுத்தவோ முடியாது. ஆகஸ்ட் பிற்பகுதியில் இருந்துGoogle Play Music மூலம் பயனர்களை வாங்க, முன்கூட்டியே ஆர்டர் செய்ய, பதிவேற்ற அல்லது இசையை பதிவிறக்கம் செய்ய அனுமதிப்பதை கூகிள் தடை செய்யும்.



ALSO READ | நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு Health ID System அறிமுகம்... அதன் சிறப்பு என்ன?


எனவே, பயனர்கள் தங்கள் Google Play Music பிளேலிஸ்ட்கள், பதிவேற்றங்கள், கொள்முதல் மற்றும் விருப்பங்களை YouTube மியூசிக்கிற்கு மாற்றுவதற்கு டிசம்பர் 2020 வரை அனுமதி உண்டு. ஆனால், அதன் பிறகு Google Play மியூசிக்கில் பயனர்களுக்கு எந்தவொரு உள்ளடக்கத்திற்கும் அணுகல் இல்லை. கூகிள் பிளே மியூசிக்கின் இந்த மாற்றம் மாற்ற முடியாதது என்பதால், தங்கள் உள்ளடக்கத்தை மாற்றத் தொடங்காத Google Play இசை பயனர்கள் அதைச் செய்யத் தொடங்க வேண்டும்.


நீங்கள் வாங்கிய எந்தவொரு உள்ளடக்கத்தையும் கூகிள் பிளே மியூசிக் தளத்தில் இருந்து யூடியூப் மியூசிக் தளத்திற்கு மாற்ற பயனர்களை அனுமதிக்கும் YouTube மியூசிக்கின் பரிமாற்ற கருவி (YouTube Music’s transfer tool ) உள்ளது.  இதற்கான மற்றொரு வழி என்னவென்றால், தரவை அப்லோட் செய்வதற்கும், YouTube இசையில் வாங்கிய மற்றும் பதிவேற்றிய இசையைப் பதிவிறக்குவதற்கும் Google Takeout-யை பயன்படுத்தலாம்.