ஆதார் அட்டையுடன் உங்கள் பான் கார்டை இணைப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் முடிக்க வேண்டிய முக்கியமான பணியாகும். தற்போது பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைக்கும் தேதியை அரசாங்கம் நீட்டித்துள்ளது. அதன்படி நாட்டின் குடிமக்கள் 30 ஜூன் 2023க்குள் தங்களின் ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைத்துக் கொள்ளலாம். முன்னதாக இதற்கான காலக்கெடுவை அரசாங்கம் மார்ச் 31, 2023 வரை வைத்திருந்தது. தற்போது இந்த தேதி ஜூன் 30 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2020ஆம் ஆண்டு பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு  உத்தரவை பிறப்பித்தது. அதன்படி கடந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி அதற்கு கடைசி நாளாக இருந்தது. இருப்பினும், நாட்டில் அப்போது நிலவிய கொரோனா சூழல் காரணமாக இந்த காலக்கெடு வரும் இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, இதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுடன் அரியர் தொகையும் வரும்...மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!


பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுஇணைக்காவிட்டால் என்ன ஆகும்? 
மத்திய நேரடி வரிகள் வாரியம் வழங்கிய காலக்கெடுவுக்குள் ஆதார், பான் எண்ணை இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாக்கப்படும். மேலும் அந்த நபர் எந்த ஒரு அரசு சார்ந்த, வங்கிகளில் பான் கார்டை வழங்க முடியாது. இந்த இடைப்பட்ட  மாதத்துக்குப் பிறகு, ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்தால் 1,000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 


ஆதார் – பான் கார்டு இணைப்பது எப்படி?


முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ தளம் http://www.incometax.gov.in செல்ல வேண்டும்.
அதில், quick links ஆப்ஷனில் Link Aadhaar கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து தோன்றும் திரையில், பான் நம்பர், ஆதார் எண், பெயர், மொபைல் நம்பர் பதிவிட வேண்டும்.
விவரங்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்துவிட்டு, ‘I validate my Aadhaar details’ ஆப்ஷன் சேலக்ட் செயது, Continue ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.
நீங்கள் ரெஜிஸ்டர் செய்த நபருக்கு, one time password அனுப்பப்படும். அதனை கேட்கும் இடத்தில் டைப் செய்து, Validate கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து, அபராத தொகையை செலுத்தியபின், பான் மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்படும்.


எஸ்எம்எஸ் மூலம் ஆதாருடன்-பான்கார்டை இணைப்பது எவ்வாறு


1. UIDPAN என டைப் செய்ய வேண்டும்.
2. UIDPAN இடைவெளி- 12 இலக்க ஆதார் எண்(இடைவெளி) 10இலக்க பான் எண்ணை டைப் செய்ய வேண்டும்.
3. ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்
4. குறுஞ்செய்தி அனுப்பியபின், ஆதாருடன் பான் எண் இணைக்கப்பட்டது குறித்த உறுதியான செய்தி கிடைக்கும்


மேலும் படிக்க | முதலில் DA உயர்வு..இப்பொது மற்றொரு ஜாக்பாட் செய்தி ஊழியர்களுக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ