2 பான் கார்ட் இருக்கா? அபராதம், சிறை தண்டனை கிடைக்கும்: இப்பவே இப்படி சரண்டர் பண்ணுங்க!!

PAN Card: உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இருந்தால், இந்த தவறை சரியான நேரத்தில் சரிசெய்து, டூப்ளிகேட் பான் கார்டை திரும்பி அளித்து விடுங்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2023, 06:24 PM IST
  • ஒருவர் இரண்டு பான் கார்டுகளை வைத்திருந்தால், அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.
  • குறைந்தபட்சம் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரலாம்.
  • அல்லது தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படலாம்.
2 பான் கார்ட் இருக்கா? அபராதம், சிறை தண்டனை கிடைக்கும்: இப்பவே இப்படி சரண்டர் பண்ணுங்க!!  title=

பான் அட்டை தொடர்பான பல சர்ச்சைகளும் சந்தேகங்களும் இந்நாட்களில் மக்களிடம் அதிகரித்து வருகின்றன. பான் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கிக் கணக்கு துவங்குவது முதல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது வரை அனைத்துக்கும் இது தேவைப்படுகின்றது. நீங்களும் பான் கார்டை ஆதாருடன் இணைக்க நினைத்தால், உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இது மிக அவசியமான ஒரு விஷயமாகும். 

விதிகளின்படி, ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை விண்ணப்பித்ததாலோ அல்லது வேறு காரணத்தினாலோ ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளைப் பெறுகிறார்கள். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இருந்தால், இந்த தவறை சரியான நேரத்தில் சரிசெய்து, டூப்ளிகேட் பான் கார்டை திரும்பி அளித்து விடுங்கள். ஏனெனில் இது வருமான வரித்துறைக்கு தெரியவந்தால், நீங்கள் பல பிரச்சனைகளில் சிக்கலாம். பான் கார்டை திரும்ப கொடுப்பது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த சூழ்நிலைகளில், ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் பெறப்பட்டிடுக்கலாம்: 

- பல முறை மக்கள் பான் கார்டுக்கு விண்ணப்பித்தும், அது குறிப்பிட்ட நேரத்திற்குள் வருவதில்லை. பின்னர் அவர்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பலமுறை இரண்டு பான் கார்டுகள் வரலாம்.

- பான் கார்டில் ஏதேனும் தவறு இருந்தால், திருத்தங்களைச் செய்வதற்குப் பதிலாக புதிய பான் கார்டுக்கு பல முறை விண்ணப்பம் செய்கிறார்கள். இந்த வகையிலும் ஒரு நபர் இரண்டு பான் கார்டுகளைப் பெறுகிறார்.

- திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் தனது குடும்பப்பெயரை மாற்றினால், அவர் புதிய பான் கார்டுக்கு பலமுறை விண்ணப்பித்து விடுகிறார். இதன் காரணமாக அவரிடம் இரண்டு பான் கார்டுகள் வந்துவிடுகின்றன. 

இதனால் வரும் பாதிப்புகள் என்ன?

வருமான வரித்துறையின் விதிகளின்படி, ஒருவர் இரண்டு பான் கார்டுகளை வைத்திருந்தால், அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது குறைந்தபட்சம் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரலாம். அல்லது தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும் படிக்க | ஆதார் அட்டையை தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம், உடனே இதை செய்யுங்கள்!

இது தவிர, இரண்டு பான் கார்டுகளை வைத்திருப்பது உங்கள் கிரெடிட் ப்ரொஃபைலை கெடுத்துவிடும். உண்மையில், கடனைக் கொடுப்பதற்கு முன், வங்கி உங்கள் ஆவணங்களைச் சரிபார்க்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இரண்டு பான் கார்டுகளை வைத்திருந்தால், அந்த நபரை மோசடி செய்பவராகக் வங்கி கருதலாம். மேலும் அவரது கடனை நிராகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், வங்கியும் பல முறை தடுப்புப்பட்டியலில் உங்களை சேர்க்கக்கூடும்.

சரண்டர் செய்வதற்கான வழிமுறை:

- ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் நீங்கள் பான் கார்டை ஒப்படைக்கலாம். ஆன்லைனில் சரண்டர் செய்ய, நீங்கள் என்எஸ்டிஎல் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

- இதற்குப் பிறகு, Application Type டிராப்-டவுனிலிருந்து  Changes or Correction in existing PAN Data/Reprint of PAN Card (No changes in existing PAN Data) தேர்வு செய்யவும்.

- படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும். படிவத்தை சமர்ப்பித்த பிறகு, உங்கள் கோரிக்கை பதிவு செய்யப்படும். அதன் பிறகு உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு டோக்கன் எண் அனுப்பப்படும்.

- டோக்கன் எண்ணைக் குறிப்பிட்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள Continue with PAN Application Form என்பதைக் கிளிக் செய்து செயல்முறையைத் தொடரவும். இப்போது ஒரு புதிய வலைப்பக்கம் திறக்கும். இந்தப் பக்கத்தில்Submit scanned images through e-Sign விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- பக்கத்தின் கீழ் இடது பக்கத்தில், நீங்கள் வைத்திருக்க விரும்பும் பான் கார்டின் விவரங்களை நிரப்ப வேண்டும். கோரப்பட்ட தகவலை நிரப்பவும், பின், ‘நெக்ஸ்ட்’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- இதற்குப் பிறகு புகைப்படம், கையொப்பம், முகவரி, அடையாள அட்டை போன்ற கோரப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றவும். தேவைப்படும் இடங்களில் பணம் செலுத்துங்கள். பணம் செலுத்திய பிறகு, பதிவிறக்குவதற்கான ரசீதைக் காண்பீர்கள். அதை பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைக்கவும்.

- இப்போது ரசீது நகலுடன் இரண்டு புகைப்படங்களையும் என்எஸ்டிஎல் அலுவலகத்திற்கு அனுப்பவும். ரசீதை அனுப்புவதற்கு முன், Application for PAN cancellation மற்றும் ரசீது எண்ணுடன் உறையை லேபிளிடவும். இதனுடன் டூப்ளிகேட் பான் தகவலைப் பட்டியலிடும் அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பி அதை ரத்து செய்யக் கோரவும்.

மேலும் படிக்க | NRI ஆதார் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு செயல்முறை இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News