மத்திய பட்ஜெட் 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறாவது முறையாக பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2024 அன்று தாக்கல் செய்கிறார். அதற்குப் பிறகு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இத்தகைய சூழ்நிலையில், அரசு தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான  பல அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில் ஊழியர்களுக்கான தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து அரசு அறிவிக்கலாம் என நம்பப்படுகிறது. புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து நீண்ட நாட்களாக அரசு பரிசீலித்து வந்தாலும், செயல்படுத்த முடியவில்லை. பட்ஜெட்டுக்கு பிறகு உங்கள் அலுவலக வேலை நேரம், விடுமுறை நாட்கள் மற்றும் சம்பளம் மாறலாம். உங்கள் அலுவலக வேலை நேரம் 12 மணிநேரம் வரை இருக்கலாம் ஆனால் வாரத்தில் 2 நாட்களுக்கு பதிலாக 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். மேலும், சம்பளமாக கையில் பணம் குறையலாம் ஆனால் பிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கலாம். தொழிலாளர் சட்ட விதிகளை விரைவில் அமல்படுத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாரத்தில் 3 நாட்கள் லீவு கிடைக்கும்


ஜூலை 1 முதல், வேலை நேரத்தை 12 மணிநேரமாக அதிகரிக்க நிறுவனங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அதன் பிறகு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். அதாவது ஊழியர்களுக்கு வார விடுமுறையாக 3 நாட்கள் கிடைக்கும். புதிய விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க முடியும். ஊழியர்கள் நான்கு நாட்களுக்கு ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். புதிய சட்டங்கள், கூடுதல் நேரத்தின் ஓவர்டைம் மணிநேரம் 50 என்பதில் இருந்து (தொழிற்சாலை சட்டத்தின் கீழ்) 125 மணிநேரமாக அதிகரிக்கும். சம்பளம் குறையும் ஆனால் பிஎஃப் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | IMPS New Service: பணம் அனுப்புவது சுலபமானது... 5 லட்சம் வரை அனுப்ப இனி இதை செய்ய வேண்டாம்


 ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பில் மாற்றம்


புதிய வரைவு விதியின்படி, அடிப்படை சம்பளம் மொத்த சம்பளத்தில் 50% அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். இதனால் பெரும்பாலான ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டு, அடிப்படைச் சம்பள உயர்வால் பி.எஃப் மற்றும் பணிக்கொடைப் பணத்திற்காக  முன்பை விட அதிகமாகப் பிடித்தம் செய்யப்படும். அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் PF பங்களிப்பு அதிகரிக்கும். PF அதிகரிக்கும் போது, ​​வீட்டிற்கு எடுத்துச் செல்லும் டெக் ஹோம் சாலரி சம்பளம் குறையும். பணிக்கொடை மற்றும் பிஎப் ஆகியவற்றில் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், ஓய்வுக்குப் பிறகு பெறப்படும் பணம் அதிகரிக்கும். இதன் மூலம் பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு சிறப்பாக வாழ்வது எளிதாகும்.


தொழிலாளர் சட்டங்கள் என்றால் என்ன - சட்டம் 4 குறியீடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது


இந்தியாவில், மத்திய தொழிலாளர் சட்டங்கள் 4 குறியீடுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குறியீட்டின் விதிகளில் ஊதியங்கள், சமூகப் பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள் மற்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் மற்றும் வேலை நிலைமைகள் போன்ற 4 தொழிலாளர் குறியீடுகள் அடங்கும். இதுவரை 23 மாநிலங்கள் இந்த வரைவு சட்டத்தை தயாரித்துள்ளன. இந்த நான்கு குறியீடுகளும் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன, ஆனால் மத்திய அரசைத் தவிர, மாநில அரசுகளும் இந்தக் குறியீடுகள் மற்றும் விதிகளை அறிவிக்க வேண்டும். அதன் பின்னரே இந்த விதிகள் நாடு மற்றும் மாநிலங்கள் முழுவதும் அமல்படுத்தப்படும்.


மேலும் படிக்க | RBI 5 புதிய சிபில் விதிகள்: குஷியில் கஸ்டமர்ஸ்... வங்கிகளுக்கு இனி அதிக வேலை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ