Viduthalai 2 Salary Details Of Vetrimaaran Vijay Sethupathi : கோலிவுட்டில் இருக்கும் புகழ் பெற்ற இயக்குநர்களுள் ஒருவராக விளங்கி வருகிறார், வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அனைத்து படங்களும் ஹிட் அடித்திருக்கின்றன. அந்த வகையில், அவரது படைப்பாக சமீபத்தில் வெளியான படம், விடுதலை பாகம் 2.
‘வெற்றி’ மன்னனாக மாறிய வெற்றிமாறன்:
கோலிவுட்டை பொறுத்தவரை எத்தனையோ இயக்குநர்கள் இருக்கின்றனர். மணிரத்னம், கெளதம் வாசுதேவ் மேனன், சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் என எந்த இயக்குநரை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் கண்டிப்பாக தலா ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தாேல்வி படங்களை கொடுத்திருப்பர். ஆனால் பொல்லாதவன் படத்தில் ஆரம்பித்து, தற்போது வெளியான விடுதலை 2 வரை அனைத்தையும் சரியான ரசிகர்கள் மத்தியில் காெண்டு சேர்த்திருப்பவர் வெற்றிமாறன்.
இவரது படங்கள் வெற்றிபெற முக்கிய காரணம், இவர் கதையை வைத்துக்கொண்டு ஹீரோக்களின் பின்னால் ஓடுவதில்லை. வலுவான கதையையும் திரைக்கதையும் தயார் செய்து விட்டு, அதற்கு ஏற்ற ஆட்களை மட்டுமே நடிக்க வைக்கிறார். அது மட்டுமன்றி இவர் இயக்கும் படங்களின் பட்ஜெட்டும் அதற்கு ஏற்றார் போல மட்டுமே இருக்கும். இப்படி, இவர் படங்கள் வெற்றி பெறுவதற்கான காரணங்கள் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம்.
விடுதலை 2:
கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி, மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களுள் ஒன்று விடுதலை பாகம் 2. கடந்த 10 வருடங்களாக கோலிவுட்டின் காமெடி நடிகராக வலம் வந்த சூரி, இந்த படத்தின் மூலம் சீரியஸான ஹீரோவாக அவதாரம் எடுத்தார். வெற்றிமாறனுடன் கைக்கோர்த்த நேரமோ, என்னவோ அவருக்கு தொடர்ந்து ஹீரோ கதாப்பாத்திரங்களே வருகின்றன. விடுதலை படத்தில் இவர் ஒரு காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
விடுதலை படத்தின் முதல் பாகத்தில் வந்த முக்கியமான கதாப்பாத்திரங்களுள் ஒன்று, வாத்தியார். தற்போது இரண்டாம் பாகத்தில் இந்த கேரக்டரின் கதைதான் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய் சேதுபதியுடன் மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம், துணிச்சலான வசனங்கள், பேச்சே இல்லை என்றாலும் கதையை புரிய வைக்கும் காட்சிகள் இருப்பதனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. புரட்சி மிக்க கதையாக இருப்பதும், இப்படம் மக்களை ஈர்த்திருப்பதற்கு ஒரு காரணம்.
மேலும் படிக்க | விடுதலை பாகம் 2 படம் 1 நாளில் செய்த வசூல் எவ்வளவு? இத்தனை கோடியா!!
வெற்றிமாறனின் சம்பளம்:
ஒரு சில இயக்குநர்கள், படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே சம்பளத்தை பேசி முடிவு செய்து படத்தை தொடங்குவர். ஒரு சிலர், படம் எவ்வளவு லாபம் பார்க்கிறதோ அதில் குறிப்பிட்ட சதவீத தொகையை சம்பளமாக கேட்பர். ஆனால் ஒரு சிலர் தான் இயகக்கும் படத்தில் இணை தயாரிப்பாளராகவே மாறி விடுவர்.
உதாரணத்திற்கு, விடுதலை பாகம் 2 படத்தை First Copy-யாக இயக்க, வெற்றிமாறனுக்கு 50 கோடி வழங்கப்பட்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். படத்தை அவர் 40 கோடிக்குள் முடித்து விட்டால் 10 கோடி அவருக்கு லாபம். இதன்படி அவர் படத்தின் இணை தயாரிப்பாளராக மாறி விடுகிறார்.
விடுதலை 2 படம், ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை, அவர் எந்த தொகைக்குள் முடித்திருக்கிறாரோ மீதம் இருப்பது அவருக்கு லாபமாக இருந்திருக்கும். அந்த வகையில் இவருக்கு சுமார் 15-16 கோடி இப்படத்தில் லாபம் கிடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியை விட அதிகமா?
விடுதலை முதல் பாகத்தில் நடிக்க விஜய் சேதுபதி ரூ.6 கோடி சம்பளமாக பெற்றாராம். இதில், அவரை விட அதிக லாபம் பார்த்த வெற்றி, இந்த படத்திலும் அவரை விட அதிகமாக பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 2ஆம் பாகத்திற்காக விஜய் சேதுபதி ரூ.15 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளாராம். அதே போல மஞ்சு வாரியருக்கு ரூ.1 கோடியும், சூரிக்கு ரூ.8 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சினிமா வட்டாரங்களில் உலா வரும் தகவல்கள் தானே அன்றி, அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | விடுதலை 2 படத்தில் விஜய்க்கு உள்குத்து! வெற்றிமாறன் வைத்த வசனத்தால் சர்ச்சை..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ