எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் உடல் ஸ்கேனர்களை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமான பயணிகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் உடல் ஸ்கேனர்களை அரசாங்கம் நிறுவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு பணியகம் இந்த முடிவை எடுத்துள்ளது. 


விமான நிலையங்களில் உடல் ஸ்கேனர்கள் நிறுவப்பட்ட பின்னர், பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகள் அனைவரையும் தனித்தனியே விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. 


விமான நிலையத்தில், பயணிகள் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்த குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் ஆகும். இந்த கால வீனடிப்பை குறைக்க இந்த நடவடிக்கை சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு பணியகம் கொண்டுவரவுள்ளது, விரைவில் அதற்கான வழிகாட்டுதலையும் வெளியிட உள்ளது.


பயணிகளின் நெரிசலைக் கையாள்வதில் விமான நிலையங்களைக் காக்கும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினருக்கு இது உதவும் என கூறப்படுகிறது. இதுவரை அமெரிக்க விமான நிலையங்களில் கிடைக்கும் இந்த வசதி இந்தியாவில் விரைவில் தொடங்கப்படும். 


இதுகுறித்து BCAS தலைவர் குமார் ராஜேஷ் சந்திரா கூறுகையில், பணியகம் விரைவில் அதற்கான விவரக்குறிப்புகள் மற்றும் விதிகளை வெளியிட உள்ளது. நாட்டின் சில விமான நிலையங்களில் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பின்னர் இது சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் விமான நிலையங்களில் எந்த உடல் ஸ்கேனர்கள் நிறுவப்பட்டாலும், அவை இந்தியர்கள் அணியும் ஆடைக்கு ஏற்றதாக இருக்கும். ஒரு பெண் சேலை அணிந்தால் அல்லது ஒரு ஆண் வேட்டி அல்லது வேறு ஏதேனும் இந்திய உடையை அணிந்தால், அதனை எளிதாக சரிபார்க்க முடியும் என சிவில் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.