புதுடெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது பங்குச்சந்தையில் நல்ல ஏற்றம் காணப்பட்டது. அந்த ஏறுமுகம் இன்றும் தொடர்கிறது. பட்ஜெட்டைப் பற்றிய பல வித பின்னூட்டங்கள் இருந்தாலும், இந்திய பங்குச் சந்தை இந்த பட்ஜெட்டால் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவே தெரிகிறது. மேலும், பங்குச் சந்தை வலுவடைந்து அதிகரிப்பது என்பது எதிர்கால பொருளாதார நிலையின் மீது முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் உள்ள நம்பைக்கையை பிரதிபலிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை பங்குச் சந்தையான BSE 1,400 புள்ளிகள் அதிகரித்து 50,000 என்ற மைல்கல் அளவில் நிலைத்து நிற்கின்றது.


காலை 9.35 மணியளவில், சென்செக்ஸ் (Sensex) 50,004.06 புள்ளிகளில் வர்த்தகம் செய்தது. இது நேற்று முடிந்த 48,600.61 ஐ விட 403.45 புள்ளிகள் அதாவது 2.89 சதவீதம் அதிகமாகும்.


11.40 மணியளவில் BSE Sensex 822.36 புள்ளிகள் அதாவது 1.69 சதவீதம் அதிகரித்து 49,422.97 ஆகவும், NSE Nifty 262.50 புள்ளிகள் அதாவது 1.84 சதவீதம் அதிகரித்து 14,543.70 ஆகவும் வர்த்தகத்தில் இருந்தன.


ALSO READ: Budget 2021: ராக்கெட் வேகத்தில் உயரும் Auto Sector பங்குகள், மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்


திங்களன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டிற்கான விரிவாக்க மத்திய பட்ஜெட்டை வழங்கினார். பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் வேளான் துறைகளுக்கான செலவினங்களை அதிகரித்தும் வரிவிதிப்புக்கு உட்படுத்தாமலும் தொற்றுநோயால் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து பொருளாதாரத்தை முன்னேற்ற வழிவகுக்கப்பட்டது.


முந்தைய அமர்வில், BSE Sensex 2,314.84 புள்ளிகள் அதாவது 5 சதவீதம் அதிகரித்து 48,600.61 புள்ளிகளில் முடிந்தது. இது, இதுவரையிலான இரண்டாவது மிகப்பெரிய ஒற்றை நாள் அதிகரிப்பாகும். மேலும் சுமார் 10 மாதங்களில் மிகச்சிறந்த வர்த்தக நாளாகவும் இது இருந்தது. இதேபோல, தேசிய பங்குச்சந்தையான NSE Nifty-யும் 646.60 புள்ளிகள் அதாவது 4.74 சதவீதம் உயர்ந்து 14,281.20 புள்ளிகளில் முடிந்தது.


பிற ஆசிய பங்குச் சந்தைகளும் செவ்வாய்க்கிழமை லாபத்தை ஈட்டின. ஜப்பானுக்கு வெளியே எம்.எஸ்.சி.ஐ.யின் ஆசியா பசிபிக் பங்குகளின் அளவு 1.25% உயர்ந்து. திங்களன்றும் இது அதிகரித்த நிலையிலேயே இருந்தது. ஹாங்காங்கின் ஹேங் செங் இன்டெக்ஸ் மற்றும் சீனாவின் பெஞ்ச்மார்க் CSI300 இன்டெக்ஸ் முறையே 1.7% மற்றும் 0.33% அதிகமாயின. ஜப்பானின் Nikkei 225 புள்ளிகள் அதாவது 0.67% அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் S&P/ASX 200 பெஞ்ச்மார்க் மேலும் 1.23% ஐ சேர்த்தது. தென் கொரியாவின் KOSPI-யும் 2.3% அதிகரித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.


ALSO READ: Budget 2021: வருமான வரி slabs பற்றி நிதியமைச்சர் ஏன் எதுவும் அறிவிக்கவில்லை?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR