இனி வங்கி ஊழியர்களுக்கு ஜாலி தான்... வார விடுமுறையில் மாற்றம்!
Bank News Update: எல்ஐசி நிறுவனத்தை போன்று இனி அனைத்து வங்கிகளிலும் வாரத்திற்கு 5 நாள் வேலை முறை கொண்டுவர பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Bank News Update: வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி ஊழியர்களுக்கும் சேர்த்து ஒரு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. வாடிக்கையாளராகிய நீங்கள் வங்கிக் கிளைக்குச் சென்றால், வங்கியின் வார விடுமுறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட இனி வாய்ப்புள்ளது. வார விடுமுறையில் மாற்றம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை, இது இன்னும் பரிசீலனையில் உள்ளது.
அனைத்து சரியாக சென்றால், வங்கி ஊழியர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் 2 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என கூறப்படுகிறது. அதாவது வங்கி ஊழியர்களும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்தியன் பேங்கிங் அசோசியேஷன் (IBA) கூட்டம் நடத்தி, அதன்பிறகு இதன்பேரில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
கூட்டம் எப்போது?
இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) இணைந்து இந்த கூட்டத்தை நடத்தும் என்று கூறப்படுகிறது. ஜூலை 28ஆம் தேதி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வங்கி விடுமுறைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Post Office Scheme: தபால் அலுவலகத்தில் இத்தனை முதலீடு திட்டங்கள் இருக்கிறதா?
கடந்த கூட்டத்தில் விவாதம்
முன்னதாக கடந்த கூட்டத்தில் 5 நாட்கள் வேலை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக UFBU தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வங்கிகள் சங்கம் கூறுகையில், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அது பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. UFBU-படி, இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்படுகிறது.
5 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டால், அனைத்து ஊழியர்களின் தினசரி வேலை நேரம் 40 நிமிடங்கள் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜூலை 28ஆம் தேதி கூட்டம் நடைபெறும், அதில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இதுமட்டுமின்றி, இந்த கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இதனுடன், நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலையும் பெறுவது அவசியம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். z
இப்போது என்ன விதி?
தற்போதைய விதிகளை நாம் பார்த்தால், தற்சமயம் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளில் விடுமுறை உள்ளது. இது தவிர, ஊழியர்கள் மூன்றாவது மற்றும் முதல் சனிக்கிழமைகளில் வேலை செய்ய வேண்டும். தற்போது வாரந்தோறும் 2 நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருவதால் இந்த முடிவு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
எல்ஐசியில் 5 நாட்கள் வேலை
எல்ஐசியில் 5 நாட்கள் வேலை நாள் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் விடுமுறை நாட்களின் பட்டியலை பார்த்தால், அடுத்த மாதம் வங்கிகளில் 14 நாட்கள் விடுமுறைகள் இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் ஆன்லைன் வங்கி வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ