ITR Filing: இது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் காலம். வரி செலுத்துவோர் அனைவரும் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பலர் ஏற்கனவே ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்து விட்டார்கள். 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 ஜூலை 2024 ஆகும். இன்னும் ஐடிஆர் தாக்கல் செய்யாதவர்களும் பலர் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் இதை விரைவில் செய்து முடிக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சரியான நேரத்தில் வருமான வரி கணக்கை (Income Tax Report) தாக்கல் செய்வது மிக அவசியமாகும். இதன் மூலம் பல வித பிரச்சனைகளை நாம் தவிர்க்க முடியும். மேலும் கடைசி நேரத்தில் வருமான வரி தளத்தில் சுமை அதிகரிக்கிறது. இதனால் ஆன்லைனில் தாக்கல் செய்யும்போது இதற்கு ஆகும் நேரம் அதிகரிக்கக்கூடும். இது உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும்.


ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படுமா?


சில நாட்களாக ஐடிஆர் மின்-தாக்கல் அதாவது ஈ-ஃபைலிங் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பல பதிவுகள் வந்துகொண்டு இருக்கின்றன. இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை வருமான வரித்துறை (Income Tax Department) நீட்டித்துள்ளதா என்ற கேள்வி பலருக்கு வந்த வண்ணம் உள்ளது. 


ஐடிஆர் தாக்கல் கடைசி தேதி பற்றி பரவும் செய்திகளும், இதனால் மக்கள் கொண்டுள்ள குழப்பமும் வருமான வரித்துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதை தெளிவுபடுத்த வருமான வரித்துறை ட்வீட் செய்து வரி செலுத்துவோரின் குழப்பத்தை நீக்கியுள்ளது. 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடு: 4% டிஏ ஹைக்? AICPI எண்கள் மூலம் வந்த குட் நியூஸ்


வருமான வரித்துறை கூறியது என்ன?


ஐடிஆர் தாக்கலுக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டதாக வந்த தகவல் போலியானது என்றும், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்றும் வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்பது தெளிவாகியுள்ளது. இதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆகத்தான் இருக்கும்.



ஜூலை 31க்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்தால் என்ன நடக்கும்?


ஜூலை 31க்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த காலக்கெடுவிற்கு பிறகு ஐடிஆர் (ITR) தாக்கல் செய்தால் அபராதத்துடன் வட்டியும் செலுத்த வேண்டி வரக்கூடும். காலக்கெடு நெருங்கும் வேளையில் ஐடிஆர் தாக்கல் செய்யும்போது பல தவறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இன்னும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஒரு வார காலம் உள்ளது. ஆகையால், இன்னும் இதை செய்யாதவர்கள், உடனடியாக இதை செய்து முடிப்பது நல்லது. 


ஐடிஆர் தாக்கல்: சில முக்கிய குறிப்புகள்


- வரி செலுத்துவோர் (Taxpayers) முதலில் உங்களுக்கான சரியான ஐடிஆர் படிவத்தை (ITR Form) தேர்வு செய்ய வேண்டும். 


- இதற்குப் பிறகு, உங்கள் ஐடிஆர் படிவத்தில் ஏற்கனவே நிரப்பப்பட்ட தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். 


- வரி கணக்கீட்டில் முக்கியமாக சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். 


- நீங்கள் வேலை பார்க்கும் பணியாளராக இருந்தால், Form 16 இன் தரவைப் பயன்படுத்தலாம். 


- மற்றவர்கள் Form 26AS மற்றும் வருடாந்திட அறிக்கையில் TDS போன்றவற்றின் தரவை செக் செய்யலாம். 


- அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, ஐடிஆர் விவரங்களை வெரிஃபை செய்ய வேண்டும். 


மேலும் படிக்க | SCSS: பாதுகாப்பான வழியில் அசத்தல் வருமானத்தை அள்ளித்தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ