HDFC Credit Card வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு: Sep 1 முதல் புதிய Payment மாற்றங்கள்!!
எச்.டி.எஃப்.சி வங்கியில் (HDFC Bank) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, குறிப்பாக HDFC-யின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி.
எச்.டி.எஃப்.சி வங்கியில் (HDFC Bank) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, குறிப்பாக HDFC-யின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்களுக்கு இது முக்கியமான செய்தி. செப்டம்பர் 1 முதல், நீங்கள் தாமதமாக பணம் செலுத்தினால், அதாவது Late Payment செய்தால், அது உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தலாம். HDFC வங்கியின் கிரெடிட் கார்டுக்கான late payment கட்டணத்தை அதிகரிப்பதாக வங்கி அறிவித்துள்ளது. இந்த தகவலை வங்கி தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளது. தகவல்களின்படி, இன்பினியா கிரெடிட் கார்டு (Infinia Credit Card) தவிர அனைத்து வகையான கிரெடிட் கார்டுகளிலும் புதிய கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
உரிய தேதிக்குள் (Due date) கிரெடிட் கார்டு பில்லின் குறைந்தபட்ச தொகை செலுத்தப்படாவிட்டாலோ, அல்லது வங்கி கார்ட் கணக்கில் உரிய தேதிக்குள் செலுத்த வேண்டிய தொகை வரவு வைக்கப்படாவிட்டாலோ லேட் பேமண்ட் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த late payment இன்பினியா கிரெடிட் கார்டில் வசூலிக்கப்படுவதில்லை.
25,000 ரூபாய் வரையிலான தொகைக்கு முன்பிருந்த வீதத்திலேயே late payment கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், தொகை இதை விட அதிகமாக இருந்தால், ஆகஸ்ட் 31 க்குப் பிறகு தனி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ALSO READ: எந்த வங்கி குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும்.. Top 10 வங்கிகளின் பட்டியல்!
இப்போது, 25,000 முதல் 50,000 வரையிலான தொகைக்கு 950 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது செப்டம்பர் 1 முதல் 1,100 ஆக உயரும். அதேபோல், 50,000 ரூபாய்க்கு மேல் உள்ள தொகைக்கும் இப்போது கட்டணமாக 950 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது 1,300 ரூபாயாக உயரும்.
இது தவிர, செப்டம்பர் முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து நகல் ஃபிசிகல் அறிக்கை கட்டணம் (Duplicate Physical Statement Charge) வசூலிக்கப்படும். ஒரு Duplicate Physical Statement-ன் கட்டணம் 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவையான மற்ற தகவல்களை பயனர்கள் HDFC வலைத்தளத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
ALSO READ: Fixed Deposit வட்டியிலேயே கணிசமாக சம்பாதிக்கலாம்: Where and How?