HDFC Netbanking Login Page Update: HDFC Bank இன் நெட் பேங்கிங்கை நீங்கள் பயன்படுத்தினால், இந்த முக்கிய அப்டேட்டை  நீங்கள் சரிபார்க்க வேண்டும். HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக NetBanking பயன்படுத்துபவர்களுக்கு ஒரு புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது. அதன்படி எச்டிஎப்சி வங்கி நெட் பேங்கிங் உள்நுழைவு பக்கத்தை வாடிக்கையாளர்களுக்காக மறுவடிவமைப்பு செய்து மேம்படுத்தியுள்ளோம் என்று வங்கி தெரிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நண்பகல் 12 மணி முதல் புதிய மாற்றம்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு புதுப்பிப்பை வெளியிடும் போது, ​​HDFC Bank Netbanking Page இன்று அதாவது ஆகஸ்ட் 8 மதியம் 12 மணிக்கு நேரலைக்கு வரும் என்று வங்கி தெரிவித்துள்ளது. எனினும், இது உங்கள் NetBanking உள்நுழைவு செயல்முறையை பாதிக்காது. புதிய அப்டேட்டில் பழைய வாடிக்கையாளர் ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழையலாம்.


ALSO  READ | Home Loan: எந்த வங்கி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது?


இடையூறு ஏற்பட்டால் இங்கே தொடர்பு கொள்ளவும்
வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து இந்த புதிய அப்டேட் பற்றிய தகவல்களை அளித்துள்ளது. புதிய நெட் பேங்கிங்கின் போது வாடிக்கையாளர்கள் ஏதேனும் இடையூறை  எதிர்கொண்டால், support@hdfcbank.com க்கு எழுதி தங்கள் புகாரை வங்கிக்கு அனுப்பலாம் என்று HDFC வங்கி தெரிவித்துள்ளது.


ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது
வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 7 மாலை முதல் ஆகஸ்ட் 8 காலை வரை சில சேவைகள் மூடப்படும் என்று மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியது.


ALSO  READ | அதிக credit cards விற்பனையான வங்கி எது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR