கார் வாங்கும் செயல்முறையை எளிதாக்கும் வகையிலும், நாடு முழுவதும் கார் விற்பனையை மேம்படுத்தும் நோக்கத்துடனும் ஹெச்டிஎஃப்சி வங்கியானது 'எக்ஸ்பிரஸ் கார் கடன்கள்' என்கிற செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது டிஜிட்டல் கார் கடன்களின் பயணத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமையும்.  ஹெச்டிஎஃப்சி வங்கியானது 10 வினாடிகளில் டிஜிட்டல் முறையில் தனிநபர் கடன் பெறும் வசதியை 10 வினாடிகளில் பெறக்கூடிய வகையில் அறிமுகப்படுத்திய பிறகு, நாடு முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் டீலர்களை ஒருங்கிணைக்கும் விதமாக, 'எக்ஸ்பிரஸ் கார் கடன்கள்' செயல்முறை மூலம் 30 நிமிடங்களில் கடன் பெறும் வசதியை தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுனா எவ்ளோ ரீஃபண்ட் கிடைக்கும்


இதுகுறித்து பேசிய ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவர் அரவிந்த் கபில், 'ஹெச்டிஎஃப்சி வங்கி டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது, தற்போது நாங்கள் தொடங்கியுள்ள எண்டு-டூ-எண்டு டிஜிட்டல் கார் கடன்கள் மூலம் முன்னேற்றத்தை அடையப்போகிறோம்.  ஹெச்டிஎப்சி வங்கியின் இந்த எக்ஸ்பிரஸ் கார் கடன்கள் செயல்முறையின் மூலம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்.  இது எங்கள் அனைத்து கிளைகள், டீலர்ஷிப்கள் மற்றும் மூன்றாம் தரப்பு தளங்களிலும் கிடைக்கும்' என்று கூறியுள்ளார்.



மேலும் அவர் கூறுகையில், வாகனங்கள் உற்பத்தி திறன் வளர்ச்சியடைந்தாலும், வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மாற்றியமைப்பதன் மூலம், குறிப்பாக இந்தியாவின் நடுநிலையான நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வாகனங்களின் மதிப்பு உயர வாய்ப்புள்ளது.  டிஜிட்டல் முறையில் எங்கள் நிறுவனத்தின் பயணத்தை ஆரம்பிப்பது எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அரவிந்த் கபில் கூறியுள்ளார்.


ஆரம்பகால கட்டத்தில் ஹெச்டிஎப்சி வங்கி 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வாடிக்கையாளர்கள் கடன் பெறும் வசதியைப் வழங்கியது.  தற்போது இந்த வசதி நான்கு சக்கர வாகனங்களுக்கு வழங்கப்படுகிறது மற்றும் இந்த கடன் வசதி படிப்படியாக இரு சக்கர வாகனங்களுக்கும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.  தி இந்தியன் ஆட்டோமோட்டிவ் நிறுவனமானது அடுத்த 5-7 ஆண்டுகளில் ஆண்டுக்கு 35 மில்லியன் புதிய வாகன விற்பனையுடன் உலகின் மூன்றாவது பெரிய நிறுவனமாக மாறுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.  இதன் விளைவாக இன்னும் பத்து வருடங்களில் 350 மில்லியனுக்கும் அதிகமான நான்கு சக்கர வாகனங்களும், 250 மில்லியனுக்கும் அதிகமான இரு சக்கர வாகனங்களும் விற்பனைக்கு வரும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க | எஸ்பிஐ வங்கியை பின்னுக்கு தள்ளிய ஐசிஐசிஐ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR