பெட்ரோல் டீசல் விலையை அதிரடியாய் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு?
Petrol Diesel Price: பணவீக்கத்தை 6 சதவீதத்துக்கும் குறைவாக வைத்திருக்க அரசு முயற்சித்து வரும் நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை ஈட்டியுள்ளதால், அடுத்த மாதம் 5 முதல் 10 ரூபாய் வரை விலையை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சிரமப்பட்டு வரும் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி. அடுத்த மாதம் பெட்ரோல், டீசல் விலையில் இருந்து மக்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம். பெட்ரோல், டீசல் விலை 5 முதல் 10 ரூபாய் வரை குறையும் என கூறப்படுகிறது. உண்மையில், மூன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பிறகு, அடுத்த மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலிக்கலாம். நிறுவனங்களின் சாதனை லாபமே விலை குறைப்புக்கு காரணம். அறிக்கைகள், அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிகர லாபம் ரூ.75 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என கூறுகிறது. கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்கள் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெற்று வருகின்றன. இதனால் நிறுவனங்களின் லாபமும் கணிசமாக அதிகரித்துள்ளது.
பொதுத்துறை எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் ஏப்ரல் 2022 முதல் விலையை உயர்த்தவில்லை. விலைகள் நிலையாக வைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் கூறுகையில், 'விலை நிர்ணயம் குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தற்போது லிட்டருக்கு சுமார் ரூ.10 என்ற அளவிலான லாபத்தில் உள்ளன. இதே பலனை நுகர்வோருக்கும் அனுப்பலாம். நிறுவனங்களின் இந்த நடவடிக்கை பணவீக்கத்தைக் குறைக்கவும் உதவும். அதே சமயம், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலிலும் (Loksabha Election) இந்த நடவடிக்கை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டியுள்ளன
2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டு Q1 மற்றும் Q2 என்னும் இரண்டாம் காலாண்டில் மூன்று OMCகள் (எண்ணெய் நிறுவனங்கள்) அதிக லாபம் ஈட்டியுள்ளன என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த லாபம் மூன்றாம் காலாண்டிலும் தொடரும். இந்த மாத இறுதியில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹ 5 முதல் ₹ 10 வரை குறைப்பது குறித்து நிறுவனங்கள் பரிசீலிக்கலாம். இதனால் எதிர்காலத்தில் சர்வதேச எண்ணெய் விலை உயர்வினால் ஏற்படும் தாக்கத்தை ஓரளவு தடுக்க முடியும்.
எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டியுள்ள லாபம்
அறிக்கையின்படி, 2023-24 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதுவரை மூன்று நிறுவனங்களின் மொத்த நிகர லாபத்தைப் பற்றி பேசினால், அது ₹ 57,091.87 கோடி. இது 2022-23 நிதியாண்டின் மொத்த லாபமான ₹1,137.89ஐ விட 4,917 சதவீதம் அதிகம்.
காலாண்டு முடிவுகள் வெளியாகும் நாள்
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) தனது மூன்றாம் காலாண்டு முடிவுகளை ஜனவரி 27 அன்று அறிவிக்கும் என்று அறிவித்துள்ளது, மற்ற இரண்டு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) ஆகியவையும் அதே நேரத்தில் தங்கள் காலாண்டு முடிவுகளை அறிவிக்கும்.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது
கடந்த மாதங்களில் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. நாட்டின் சில்லறை பணவீக்கம் 2023 டிசம்பரில் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.69 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், இந்த பணவீக்கம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான். அதை குறைக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். பணவீக்கத்தை 6 சதவீதத்துக்கும் குறைவாக வைத்திருக்க அரசு முயற்சிக்கிறது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ