Home Loan: சமீப காலமாக இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை பல மடங்கு உயர்த்தி வருகிறது, இதன் காரணமாக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் முன்பை விட அதிகமாக உள்ளது. வட்டி விகித உயர்வு காரணமாக, வீட்டுக் கடன் பெற தகுதியானவர்களின் எண்ணிக்கையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது மற்றும் வீட்டுக்கடனில் அதிக தொகை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிக தொகையில் வீட்டு கடனை பெற நினைப்பவர்கள் சில வழிகளை பின்பற்றுவதன் மூலம் அதிக கடன் தொகையை பெறலாம். வீட்டுக் கடனைப் பெற சில வழிகள் உள்ளன, இதன் மூலம் நீங்கள் அதிக தொகையைப் பெற்று உங்கள் கனவு வீட்டை எளிதாக வாங்கலாம் அல்லது கட்டலாம். அதிக கடன் தொகையானது கிரெடிட் ஸ்கோர் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்து தான் கடன் வழங்குனரால் வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி இன்னும் சில காரணிகளை கருத்திற்கொண்டு அதனடிப்படையிலேயே வங்கிகள் கடன் தொகையை வழங்குகின்றது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 7th pay commission: அடி தூள்... 50% டிஏ, அடிப்படை ஊதியத்தில் எக்கச்சக்க ஏற்றம்


1) ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் உங்களுக்கு குறைந்த வட்டியில் அதிக வீட்டுக் கடன் தொகையைப் பெற உதவுகிறது. எஸ்பிஐ வங்கி முதல் ஹெச்டிஎஃப்சி வரையிலான வங்கிகள் வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் தான் வீட்டுக் கடன் தொகையை வழங்குகின்றது. 


2) கடன் காலத்தை அதிகரிப்பது வீட்டுக் கடனை திருப்பி செலுத்தும் இஎம்ஐ தொகையை குறைக்கிறது மற்றும் அதிக கடன் தொகையைப் பெற உங்களை அனுமதிக்கிறது. கடன் காலத்தை அதிகரிக்க நீங்கள் கடன் வழங்குபவர்களிடம் கேட்கலாம். 


3) உங்களுடன் இன்னொருவரையும் சேர்க்கும்பொழுது உங்களுக்கு அதிக கடன் தொகை கிடைக்கப்பெறும். ஏனென்றால் அதிக கடன் தொகையை இரண்டு நபர்களால் திருப்பிச் செலுத்த முடியும் என்று வங்கி நம்புவதால் இது நடக்கிறது. இருப்பினும் வங்கி கடன் வழங்கும்போது இருவரின் தகுதியையும் சரிபார்க்கும். 


4) டவுன்பேமென்ட்டை அதிகரிப்பதும் அதிக கடன் தொகையை பெற ஒரு நல்ல வழியாகும். உங்களிடம் போதுமான சேமிப்பு இருந்தால், டவுன்பேமென்ட்டை அதிகரிப்பதன் மூலம் அதிக கடன் தொகையைப் பெறலாம். டவுன்பேமென்ட் செய்வது உங்களின் இஎம்ஐ-யை குறைக்கும் மற்றும் கால அளவையும் குறைக்க உதவும். 


5) உங்களிடம் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன் நிலுவையில் இருந்தால், நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், உடனடியாக அதைத் தீர்க்க வேண்டும். நிலுவை தொகைகளை செலுத்திய பின்னர் நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கிறீர்கள், உங்களுக்கு வங்கி நல்ல கடன் தொகையை வழங்கும். 


மேலும் கடன் வரலாறு நல்ல நிலையில் இருக்குமானால் உங்கள் கிரெடிட் ஸ்கோரும் நல்ல நிலையில் இருக்கும், உங்களுக்கு கடன் பெறும் வாய்ப்புகளும் அதிகமிருக்கும். கடன் தவணை தொகையை நீங்கள் தாமதமாகவோ அல்லது சரியாக செலுத்தாமலோ இருந்து வந்தால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் மிகப்பெரியளவில் பாதிப்பு ஏற்படும். கிரெடிட் ஸ்கோரை பழைய நிலைக்கு கொண்டு வர குறைந்தது நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம். 300 முதல் 900 வரை சிபில் ஸ்கோர் மதிப்பெண்கள் உள்ளது, இதில் அதிக மதிப்பெண்கள் இருந்தால் உங்களுக்கு கடன் வழங்குபவர்கள் எளிதில் கடன் வழங்கி விடுவார்.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ