இந்தியர்களின் மிக முக்கிய கனவுகளில் ஒன்று, அவர்களுக்கான ஒரு சொந்த வீடு ஒன்றை வாங்குவது. அந்த கனவை நனவாக்க பெரும்பாலோனோர் வீட்டுக் கடன் வாங்குகின்றனர். அதிலும் வீட்டுக் கடன்களின் அளவு மிக அதிகமாகும். மேலும் வீட்டுக் கடன்களின் கால அளவும் 10, 20 அல்லது சுமார் 30 வருடங்களாக இருக்கலாம். அத்தகைய நீண்ட நெடிய காலத்தில் வீட்டுக் கடன் வாங்கிய நபருக்கு துரதிஷ்டவசமாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், வீட்டுக் கடன் வாங்கியவரின் வாரிசு, சொந்தத்தை இழந்த சோகத்துடன், வீட்டுக கடன் பற்றிய பொறுப்பும் வந்து சேரும். எனவே, சட்ட ரீதியாக உங்களுடைய வாரிசுக்குத் துன்பம் ஏதேனும் ஏற்படாமல் எவ்வாறு தடுக்க வீட்டுக் கடனை வாங்கும் பொழுது அதை ஒரு நல்ல தொகைக்கு காப்பீடு செய்வது மிகவும் இன்றியமையாதது. அது புத்திசாலித்தனமும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் வீடு வாங்கும் போது வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு பல காப்பீட்டுக் பாலிசிகள் உள்ளன. இது வீட்டுக் கடனுடன் தொடர்புடைய அபாயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. இவை கூடுதல் பாதுகாப்புடன் உங்களுக்குப் பாதுகாப்பையும் அளிக்கின்றன.


வீட்டுக் கடன் காப்பீடு: வீட்டு உரிமையாளர்களுக்கான நிதிப் பாதுகாப்பு


வீட்டுக் கடன் (Home Loan) காப்பீடு, அடமானக் காப்பீடு அல்லது அடமானப் பாதுகாப்புக் காப்பீடு என்றும் அழைக்கப்படுகிறது. இறப்பு போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளால் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் வீட்டு உரிமையாளர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.


வீட்டுக் கடன் காப்பீட்டுக்கான கட்டணம் 


வீட்டுக் கடனுக்கான காப்பீட்டை வீட்டுக் கடன் எடுக்கும் நேரத்திலோ அல்லது கடன் காலத்தில் எந்த நேரத்திலும் வாங்கலாம். கடன் தொகை, கடன் காலம், கடன் வாங்குபவரின் வயது மற்றும் ஆரோக்கியம் மற்றும் கவரேஜ் வகை உள்ளிட்ட பல காரணிகளைச் சார்ந்தது காப்பீட்டுக்கான கட்டணம். வீட்டுக் கடன் காப்பீடு கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பணத்தை பணமடங்காக்கும் செல்வ மகள் சேமிப்பு திட்டம்... முதிர்வின் போது கையில் ₹64 லட்சம் கிடைக்கும்!


சொத்துக் காப்பீடு: வீடுகளுக்குப் பாதுகாப்பு முக்கியம்


இந்தியாவில் வீட்டுக் கடன்களுக்கு சொத்துக் காப்பீடு கட்டாயம். இருப்பினும், கடன் வாங்குபவர்களுக்கு காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ளது மற்றும் எந்த நிறுவனத்திடமிருந்தும் கவரேஜைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, தீ, வெள்ளம், பூகம்பம் மற்றும் பிற ஆபத்துகளுக்கு எதிராக அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களுக்கு அடமானம் பாதுகாப்பு அளிக்கிறது என்று பாரத ஸ்டேட் வங்கி (SBI) கூறுகிறது.


வீட்டுக் கடனுடன் கூடிய காப்பீட்டு வகைகள்


எஸ்பிஐ வீட்டுக் கடன் போர்ட்டலின் படி, டேர்ம் இன்சூரன்ஸ் காப்பீடு எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இது பாலிசிதாரருக்கு நிதிக் காப்பீட்டை வழங்குகிறது. பாலிசி காலத்தில் காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்தால் பயனாளிக்கு இறப்பு பலன் வழங்கப்படும். கால காப்பீடு கட்டாயமில்லை . என்றாலும், அதனை எடுப்பது புத்திசாலித்தனமாகும். எஸ்பிஐ பொது சொத்து காப்பீட்டையும் வழங்குகிறது.


வீட்டுக் கடன் காப்பீட்டின் நன்மைகள் மற்றும் தீமைகள்


வீட்டுக் கடன் காப்பீடு வாங்குவது அல்லது வாங்காதது தனிப்பட்ட முடிவு. முடிவெடுப்பதற்கு முன் அனைத்து அம்சங்களையும் கவனமாக பரிசீலிக்க வேண்டியது அவசியம்.


மேலும் படிக்க | 44% ஊதிய உயர்வுடன் அதிரடியாய் வருகிறது அடுத்த ஊதிய கமிஷன்: மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ