Hike In Home Loan Interest: ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்குப் பிறகு, அரசு வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன, இது மக்கள் வாங்கியுள்ள கடன் மீதான சுமையை அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் முடிவதற்கான அறிகுறிகளே இல்லாத நிலையில், சாதாரண மக்கள் மீதான கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி, ஒரே வருடத்தில் ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதத்தை அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வெளிவந்தவுடனே, வங்கிகளும் வட்டி விகிதத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பணவீக்கத்தை சமாளிக்க முயற்சிக்கிறது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.25 சதவீதமாக அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு வங்கிகளும் வட்டி விகிதங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வரிசையில், பல அரசு வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தியதால், சாமானியர்களின் கடன்களுக்கான வட்டி சுமை அதிகரித்துள்ளது. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய வங்கிகள் இவை...


மேலும் படிக்க | SBI: என்ஆர்ஐ வட்டி விகிதங்களை அதிகரித்தது எஸ்பிஐ! வட்டி விகிதம் & கால்குலேட்டர்


பாங்க் ஆப் பரோடாவின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, சில்லறை கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் (Baroda Repo Linked Lending Rate) 8.85 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 6.25 சதவீதமாக இருந்ததில் இருந்து 2.60 சதவீதம்  அதிகரித்துள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 8 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் வீட்டுக் கடன்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது. நிதிகளின் மார்ஜினல் காஸ்ட் அதாவது MCLR 15-35 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கி கூறியுள்ளது. இதனுடன், வங்கி ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதத்தையும் (Repo Linked Lending Rate (RLLR)) 9.10 சதவீதமாகக் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 10 முதல் நடைமுறைக்கு வருகின்றன.


பேங்க் ஆஃப் இண்டியா இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, ரெப்போ விகிதத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, ரெப்போ அடிப்படையிலான கடன் விகிதத்தை அதாவது RBLR ஐ 9.10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல வட்டி விகிதங்களையும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உயர்த்தியுள்ளது.


இதில், 1 ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் 8.15% ஆகவும், 6 மாத எம்சிஎல்ஆர் 7.90% ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 7 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.


மேலும் படிக்க | தன்பாலின திருமண மசோதாவில் அதிபர் ஜோ பிடன் எப்போது கையெழுத்திடுவார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ