நியூடெல்லி: வீடு வாங்குவது என்பது சாதாரண மனிதர்களின் வாழ்நாள் லட்சியமாக இருக்கிறது. மொத்தமாக பணம் சேர்த்து வீடு வாங்கலாம் என்றால், அதற்குள் விலை அதிகரித்துவிடுகிறது.எனவே, வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கும் வழக்கம் பரவலாகிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது பாதுகாப்பான கடன் என்பதால் இந்தியாவிலும் மிகவும் பிரபலமாக உள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும், எவ்வளவு மாதாந்திர தவணை செலுத்துகிறோம் என்பது, வீட்டுக் கடனில் முக்கியமாக பார்க்க வேண்டியது. 


இதில் தற்போது பஜாஜ் ஹவுசிங் ஃபினான்ஸ் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, இது நடுத்தர வருமானம் உள்ள இளைஞர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று நிதி ஆலோசர்கள் தெரிவிக்கின்றனர்.


பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ்


வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதைத் தீர்மானிக்கும் காலமான இ.எம்.ஐ என்பது இதுவரை அதிகபட்சம் 30 ஆண்டுகளாக இருந்தது. கடன் மற்றும் வட்டி கணக்கிடப்பட்டு, அவை சமமான மாதாந்திர தவணைகள் (EMI) மூலம் திருப்பிச் செலுத்தப்படுகிறது. அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரை இருந்த இந்த கடன் காலத்தை, பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், 40 ஆண்டுகளாக நீட்டிக்கிறது.


மேலும் படிக்க | 7th pay commission: அடி தூள்... 50% டிஏ, அடிப்படை ஊதியத்தில் எக்கச்சக்க ஏற்றம்


தவணை கால மாற்றத்துடன், பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் இப்போது சமமான மாதாந்திர தவணைகளை (EMI) வழங்குகிறது, இது ஒரு லட்சத்திற்கு வெறும் 733 ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.  


திருத்தப்பட்ட தவணைக்கால வரம்பு


பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸின் திருத்தப்பட்ட தவணைக்கால வரம்பு, விண்ணப்பதாரரின் வயதுக்கு உட்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸின் வயதுக்கான தகுதி அளவுகோல் 23 முதல் 75 ஆண்டுகள் ஆகும், கடன் முதிர்வு நேரத்தில், கடன் வாங்குபவரின் அதிகபட்ச 75 என்பதன் அடிப்படையில் 40 ஆண்டு கால வீட்டுக் கடன் வழங்கப்படும்.


பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் கடன்கள் சம்பளம் பெறும் தனிநபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஆண்டுக்கு 8.50% என்ற வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை வழங்குகிறது.  


பெண்களுக்கான வீட்டுக் கடன்


தங்கள் கனவு இல்லத்தை வாங்க, அதிக முன்பணம் வேண்டும் என்பதும், கடன் செயல்முறை எளிதாகவும் சுலபமாகவும் அமைய வேண்டும் என வீட்டு கடன் பெறுபவர்கள் விரும்புகின்றனர். இதற்கு மிகவும் சிறந்த வழி, குடும்பத்தில் வீட்டுக்கடன் பெற திட்டமிட்டால், அதை பெண்களின் பெயரில் எடுப்பது தான். இதன் அடிப்படையில், வீட்டு கடன் வழங்கும்போது கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடிய பல காரணிகள் ஆகும்.  


மேலும் படிக்க | AELTC: விம்பிள்டன் பரிசுத்தொகையை அதிகரிக்கப்பட்டது! $56.52 மில்லியனாக உயர்ந்தது


அதிகளவு கடன் தகுதி: வருமானம் கொண்ட பெண்கள்,தங்கள் வாழ்க்கைத் துணைவருடன் இணைந்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இது அவர்களின் வீட்டு கடன் தகுதியை நீட்டிப்பதுடன், பல நன்மைகளையும் வழங்குகிறது.


வரி விலக்கு நன்மைகள்


தம்பதியினர் இருவருக்கும் தனித்தனியாக வீட்டு கடன் அடைப்பதின் மூலம் கிடைக்கப்பெறும் வரி நன்மைகள் இருவரும் சேர்ந்தே அடைப்பதிலும் கிடைக்கின்றன. குறிப்பாக ரூ.1.5 லட்சம் வரை தனித்தனியாக அடைப்பதற்கும் (பிரிவு 80C) சேர்ந்து அடைப்பதில் ரூ.2 லட்சம் வரையிலும் (பிரிவு 24) கிடைக்கிறது. எனவே ஒரு கூட்டாக அவர்கள் மொத்தம் ரூ.3 லட்சம் வரையிலும் (பிரிவு 80C) ரூ.4 லட்சம் வரையிலும் (பிரிவு 24) வரி விலக்கு நன்மையை பெறலாம்.  


 முத்திரைதாள் கட்டணம்


சொத்து வாங்கும்போது, பெண் பெயரில் வாங்கினால், அதற்கு முத்திரை தாள் கட்டணம் குறைவு. மாநில அரசுகள் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் முக்கியத்துவம் அளிப்பதால் முத்திரை தாள் கட்டணம் ஒப்பிட்டளவில் குறைவாகும்.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ