Home Loan Repo Rate: வட்டி விகிதங்களை அதிகரித்தன இந்த வங்கிகள், விவரம் இதோ

Home Loan Repo Rate: நாட்டின் மிகப்பெரிய வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான எச்டிஎஃப்சி லிமிடெட்,  அதன் ரீடெய்ல் பிரைம் லெண்டிங் வீதத்தை அரை சதவீதம் அதிகரித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 10, 2022, 10:51 AM IST
  • எச்டிஎஃப்சி லிமிடெட் ரீடெய்ல் பிரைம் லெண்டிங் வீதத்தை அதிகரித்துள்ளது.
  • ரிசர்வ் வங்கி புதன்கிழமை ரெப்போ விகிதத்தை உயர்த்தியது
  • கடந்த ஒரு மாதத்தில் நான்காவது முறையாக எச்டிஎஃப்சி லிமிடெட் அதன் வீட்டுக் கடன் விகிதங்களை அதிகரித்துள்ளது.
Home Loan Repo Rate: வட்டி விகிதங்களை அதிகரித்தன இந்த வங்கிகள், விவரம் இதோ title=

வீட்டுக் கடன் ரெப்போ விகிதம்: நாட்டின் மிகப்பெரிய வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான எச்டிஎஃப்சி லிமிடெட்,  அதன் ரீடெய்ல் பிரைம் லெண்டிங் வீதத்தை அரை சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுத்துறை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் (IOB) ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி புதன்கிழமை ரெப்போ விகிதத்தை உயர்த்தியது

இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமையன்று ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியது. இதற்குப் பிறகு, மற்ற நிதி நிறுவனங்களும் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் செயல்முறையைத் தொடங்கின. எச்டிஎஃப்சி லிமிடெட், வியாழக்கிழமை, பங்குச் சந்தைக்கு தகவல் அனுப்பி வீட்டுக் கடனுக்கான சில்லறை முதன்மைக் கடன் விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறியது. இந்த உயர்வு ஜூன் 10 முதல் அமலுக்கு வருகிறது.

எச்டிஎஃப்சி லிமிடெட் ஒரு மாதத்தில் நான்காவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்துகிறது

அறிக்கையின்படி, கடந்த ஒரு மாதத்தில் நான்காவது முறையாக எச்டிஎஃப்சி லிமிடெட் அதன் வீட்டுக் கடன் விகிதங்களை அதிகரித்துள்ளது. வீட்டுக் கடனை அரை சதவிகிதம் 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தியுள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக மே 2, மே 9 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளிலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.

மேலும் படிக்க | டிக்கெட் முன்பதிவில் பம்பர் தள்ளுபடி வழங்கும் IndiGo நிறுவனம்; முழு விபரம் 

இந்த 4 வங்கிகளும் ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளன

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் (ஐஓபி) வியாழன் அன்று வங்கி ரெப்போ அடிப்படையிலான கடன் விகிதத்தை (ஆர்எல்எல்ஆர்) 7.75 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த உயர்வு ஜூன் 10, 2022 முதல் அமலுக்கு வரும். 

எச்டிஎஃப்சி லிமிடெட் மற்றும் ஐஓபிக்கு முன், புதன்கிழமை, 3 பொதுத்துறை வங்கிகள் ரெப்போ விகிதத்தை அரை சதவீதம் உயர்த்துவதாக அறிவித்தன. இந்த வங்கிகளில் இந்தியன் வங்கி, பிஎன்பி மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அடங்கும்.

முன்னதாக, புதன்கிழமையன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்தார். இதன் பிறகு ரெப்போ விகிதம் 4.40 சதவீதத்தில் இருந்து 4.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

சுமார் ஒரு மாத கால இடைவெளியில் இரண்டாவது முறையாக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ரெப்போ விகித உயர்வுக்குப் பிறகு வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் கார் கடன் இஎம்ஐகள் அதிகரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

மேலும் படிக்க | FD வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது ICICI வங்கி; புதிய வட்டி விகித விபரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News