புதுடில்லி: பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவின் (Pradhan Mantri Mudra Loan) கீழ், சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் விவசாயம் அல்லாத சிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக பத்து லட்சம் வரை கடன் பெறலாம். முத்ரா கடனில் மூன்று பிரிவுகள் உள்ளது. அதாவது சிசு யோஜனா (Shishu Yojana), கிஷோர் யோஜனா (Tarun Yojana) மற்றும் தருண் யோஜனா (Kishor Yojana) என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த 3 யோஜனா அடிப்படையில் கடன்கள் வழங்கப்படுகிறது. முத்ரா கடனை (Mudra  Loan) எவ்வாறு பெறுவது என்று தெரிந்து கொள்ள விரும்பினால். முழுமையான தகவல் இங்கே.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்று வகையான முத்ரா கடன்கள்:
சிசு கடன்: இந்த திட்டத்திற்கு ரூ.50,000 கடன்கள் வழங்கப்படுகின்றன.
கிஷோர் கடன்: ரூ. 50,0001 முதல் 5 லட்சம் அடி வரை கடன் கிடைக்கும்.
தருண் கடன்: தருண் கடன் திட்டத்தின் கீழ் ரூ .5 லட்சம் முதல் ரூ .10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.



PMMY திட்டத்தின் கீழ் யாருக்கு கடன் கிடைக்கும்: 
சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் எந்தவொரு இந்திய குடிமகனும் PMMY இன் கீழ் கடன் பெறலாம். உங்கள் தற்போதைய வணிகத்தை விரிவுபடுத்த விரும்பினால், அதற்கு பணம் தேவைப்பட்டால், நீங்கள் பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் ரூ .10 லட்சம் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் ஏப்ரல் 2015 இல் தொடங்கப்பட்டது.


PMMY கடன் பெறுவது எப்படி?
முத்ரா திட்டத்தின் (பி.எம்.எம்.ஒய் - PMMY) கீழ் உள்ள கடன்களுக்கு, நீங்கள் அரசு அல்லது வங்கி கிளைக்கு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க விரும்பினால், நீங்கள் உரிமை அல்லது வாடகை ஆவணங்கள், வேலை தொடர்பான தகவல்கள், ஆதார் (Aadhaar), பான் எண் (PAN Card) என சில ஆவணங்களை வழங்க வேண்டும். கடன் வழங்கும் செயல்முறை குறித்து அனைத்து வங்கிகளின் விவரங்களும் முத்ரா திட்ட இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன, மேலும் நீங்கள் கடன் வாங்க விரும்பினால், படிவத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.



படிவத்தை எப்படி நிரப்புவது? தகவல் இங்கே:


  •  கடன் விண்ணப்ப படிவத்தை https://www.mudra.org.in/ இல் பதிவிறக்கவும்.

  •  சிசு கடன் விண்ணப்பம் வேறு. ஆனால் தருண் மற்றும் கிஷோர் கடனுக்கான படிவம் ஒன்றே.

  •  கடன் விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

  •  சரியான மொபைல் எண், ஆதார் எண், பெயர், முகவரி போன்றவற்றை வழங்கவும்.

  •  உங்கள் வணிகத்தை எங்கு தொடங்க விரும்புகிறீர்கள் என்பது பற்றிய தகவல்களை வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  •  OBC / SC / ST பிரிவுகளின் கீழ் உள்ள விண்ணப்பதாரர்கள் சாதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

  •  2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை கொடுக்க வேண்டும்.

  •  படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, எந்தவொரு அரசு அல்லது தனியார் வங்கிக்கும் சென்று மீதமுள்ள அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்யுங்கள்.

  •  பின்னர் அனைத்து ஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பிக்கவும்.

  •  வங்கியின் கிளை மேலாளர் உங்களைப் பற்றிய தகவல்களை பெற்றதும், உங்கள் தகவலின் அடிப்படையில், உங்கள் PMMY கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.


 



வட்டி விகிதங்கள் என்றால் என்ன?
பிரதமர் முத்ரா திட்டத்தின் வட்டி (Mudra Yojana Interest) விகிதம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு வேறுபட்டது. அதாவது, வெவ்வேறு வங்கிகள் முத்ரா கடன்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வசூலிக்கக்கூடும். வட்டி விகிதம் கடன் வாங்குபவரின் வணிகத்தின் தன்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய திறனைபொறுத்தது. பொதுவாக, குறைந்தபட்ச வட்டி விகிதம் 12 சதவீதமாகும்.