புதுடெல்லி: பல்வேறு திட்டங்களில் நாம் முதலீடு செய்கிறோம். இந்த முதலீட்டின் மூலம், எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்குக்ம் என்ற எண்ணத்தில் தான் முதலீடுகளை செய்கிறோம். அதிகபட்ச வருமானத்தைக் கொடுக்கும் பலத் திட்டங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் சிறந்தவைகளில் ஒன்றான PPF திட்டத்தைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருங்கால வைப்பு நிதித் திட்டம்


தாங்கள் சேமிக்கும் பணம் அதிக வருமானத்தைக் கொடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதிக லாபம் கொடுத்தாலும் குறைந்த ரிஸ்க் எடுக்க விரும்பும் பலரும் பாதுகாப்பான முதலீட்டையே விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ரிஸ்க் குறைவாக இருக்கும் திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (Public Provident Fund).


PPF திட்டத்தில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்திற்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் மக்கள் முதலீடு செய்தால், அரசாங்கம் கொடுக்கும் நிலையான வட்டியைப் பெறலாம். 


PPF திட்ட வட்டி விகிதம்


தற்போது பிபிஎஃப் திட்டத்தில் 7.1 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. இதை விட அதிக வருமானத்தை விரும்பினால், அதற்கும் ஒரு வழி இருக்கிறது. பிபிஎஃப் வட்டி விகிதம், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது, மேலும் அது அரசாங்கத்தின் மூலமாகவும் மாற்றப்படலாம். எனவே, வட்டி விகிதத்தை மனதில் வைத்து முதலீடு செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் இருந்த 295 ரூபாய் காணவில்லையா... இது உங்களுக்கான எச்சரிக்கை!


முதிர்வுத் தொகை


பிபிஎஃப் திட்டத்தில், மக்கள் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ. 500 முதலீடு செய்ய வேண்டும். அதேபோல, ஒரு நிதியாண்டில் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம். PPF திட்டத்தின் முதிர்வு வருமானம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும். மேலும், விரும்பினால், பிபிஎஃப் திட்டத்தை 15 ஆண்டுகளுக்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.


நீண்டகால சேமிப்பு


நீண்ட கால சேமிப்பு என்றாலே, அனைவருக்கும் பிபிஎஃப் திட்டம் தான் நினைவுக்கு வரும். வரியைச் சேமிக்கவும், பாதுகாப்பான வருமானத்தை ஈட்டவும் உதவும் பிபிஎஃப் கணக்கில் உள்ள சேமிப்பின் மீது கடன் வாங்கி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே கடனைப் பெற முடியும், முதல் கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகே அடுத்த கடனை வாங்க முடியும்.


வட்டி விகிதங்கள்


கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் வருமானத்துடன் பாதுகாப்பை வழங்கும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு கிடைக்கும் வருமானம் முற்றிலும் வரிவிலக்குக்கு உட்பட்டது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்..


முதிர்ச்சியடைந்த பிறகு PPF  கணக்குகள் செயலில் இல்லை என்றால் என்ன செய்வது என்பது பலருக்கும் எழும் சந்தேகம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 மற்றும் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை மொத்தமாகவோ அல்லது 12 மாதாந்திர தவணைகளாகவோ பிபிஎஃப் முதலீடு செய்யலாம்.


மேலும் படிக்க | PPF: பிபிஎஃப்பில் இருந்து சுலபமாக கடன் பெற டிப்ஸ்! வட்டியும் குறைவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ