Gold Storage Limit at Home: தங்கம் என்பது ஒரு உலோகம் மட்டுமல்ல. இந்திய மக்களுக்கு இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். இது ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதோடு, குடும்பங்களின் மகிழ்ச்சிக்கும் இது காரணமாகின்றது. நம் நாட்டில் பண்டிகை நாட்களில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. வருமான வரி சோதனைக்கு பயப்படாமல் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? வருமான வரிச் சட்டம் 1961-ன் படி இந்தியாவில் தங்க சேமிப்பு வரம்பு என்ன? இதை குறித்து இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்கத்தை (Gold) நாம் பல வழிகளில் வாங்கலாம் என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்தியாவில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச தங்கத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? பெரும்பாலான இந்திய குடும்பங்கள் தங்கத்தை வாங்கி சொந்தமாக வைத்திருக்கிறார்கள். எனினும், அவர்கள் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்க முடியும் என்பதற்கான சட்ட வரம்புகளை அவர்கள் அறிந்திருப்பதில்லை. நமது நாட்டில் 1968ஆம் ஆண்டு தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் உருவாக்கப்பட்டது.


கணக்கில் வராத தங்கத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அரசாங்கம் தங்க அம்னெஸ்டி திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட வரம்புக்கு மேல் கணக்கில் வராத தங்கத்தை வைத்திருப்பவர்களுக்கு வருமான வரி நோட்டீஸ் (Income Tax Notice) அனுப்பப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் சமீபத்தில் வெளிவந்த செய்திகள் கூறுகின்றன. அறிக்கைகள் வெளியான சில நாட்களில், இது குறித்த பல சந்தேகங்களும் எழுந்துள்ளன. தற்போதைய விதிகளின்படி வருமான வரித்துறை சோதனையில் சிக்காமல், வருமான வரி நோட்டீஸ் வராமல் இருக்க, ஒருவர் தனது வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்து ஏராளமான மக்கள் குழப்பத்தில் உள்ளனர். 


இந்திய குடிமக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய, அதை வாங்க அவர்களுக்கு கிடைத்த வருமான ஆதாரத்தை விளக்கினால், தங்க நகைகள் அல்லது ஆபரணங்கள் வைத்திருக்கும் அளவுக்கு எந்த வரம்பும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், கணக்கில் வராத தங்கத்தை வீட்டில் வைத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வரம்புகள் உள்ளன.


மேலும் படிக்க | அந்தமான் டூர் போக பிளானா... IRCTC வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ்!


இந்திய குடிமக்கள் தங்க நகைகள் அல்லது ஆபரணங்களை வைத்திருப்பதற்கு எந்த வரம்பும் இல்லை. ஆனால், அவர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய அவர்களுக்கு உதவிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அவர்களிடம் இருக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) கூறுகிறது. 


டிசம்பர் 01, 2016 தேதியிட்ட மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தெளிவுபடுத்தலின்படி, தங்கம் பெறப்பட்ட வருமான ஆதாரம் குறித்து நியாயமான விளக்கம் இருந்தால், தங்க நகைகள் அல்லது ஆபரணங்களை வைத்திருப்பதற்கு வரம்பு இல்லை. 


இந்தியாவில் நாம் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியும்?


இந்த கேள்வி பலருக்கு அடிக்கடி எழுகிறது. இந்தியாவில் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வீட்டில் வைத்திருக்கக்கூடிய தங்க சேமிப்பு வரம்பு வேறுபட்டது. முதல் பார்வையில், ஒருவர் கொடுத்துள்ள வருமான ஆதாரங்களுடன் ஒத்துப்போகாமல் இருப்பது போல தோன்றினாலும், திருமணமான பெண்களிடம் 500 கிராம், திருமணமாகாத பெண்களிடம் 250 கிராம், ஆண்களிடம் 100 கிராம் அளவிலான நகைகள் மற்றும் ஆபரணங்கள் வரை இருந்தால், அவை பறிமுதல் செய்யப்படாது என்று CBDT தெளிவுபடுத்தியுள்ளது. ஆகையால், தங்கம் வாங்கியதற்கான வருமான ஆதாரம் இருக்கும் வரை, வருமான வரி (Income Tax) சோதனைக்கு ஒருவர் அச்சப்படத் தேவையில்லை. 


மேலும் படிக்க | பங்குச்சந்தை முதலீடு மூலம் கோடீஸ்வரனாக... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ