EPS Pension: மாதா மாதம் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிஎஃப் கணக்கு மூலம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு முக்கியமான நன்மை பற்றி இந்த பதிவில் காணலாம். ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நடத்தப்படும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இந்த அமைப்பு, அமைப்பு சார்ந்த துறையில் பணிபுரியும் ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்கிறது. EPF திட்டத்தில் ஏற்கனவே உள்ள மற்றும் புதிய EPF உறுப்பினர்கள் என இரு தரப்பினரும் பங்கு கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணியாளர் ஓய்வூதியத் திட்டமான EPS இன் கீழ் ஓய்வூதிய வசதியைப் பெற சில நிபந்தனைகள் உள்ளன. இதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு EPS க்கு பங்களிக்க வேண்டியது அவசியமாகும். அதாவது பணியாளர் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதிகபட்ச ஓய்வூதிய சேவை 35 ஆண்டுகள் ஆகும். பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பணி ஓய்வுக்குப் பிறகு எவ்வளவு ஓய்வூதியம் (Pension) கிடைக்கும்? இதற்கான கணக்கீடு என்ன? அதை பற்றி இங்கெ காணலாம்.


இபிஎஸ் ஓய்வூதிய கணக்கீடு சூத்திரம் (EPS Pension Calculation Formula)


EPS பணியாளர்கள் எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார்கள் என்பதற்கான ஃபார்முலாவை இங்கே காணலாம்: 


இபிஎஸ் = சராசரி சம்பளம் x ஓய்வூதிய சேவை/70
(EPS = Average Salary x Pensionable Service/70)


- சராசரி சம்பளம் என்பது அடிப்படை சம்பளம் (Basic Salary) + அகவிலைப்படி (Dearness Allowance). 


- இது கடந்த 12 மாதங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 


- இதற்கான அதிகபட்ச ஓய்வூதிய சேவை ஆண்டுகள் 35 ஆகும். 


- ஓய்வூதியம் பெறக்கூடிய அதிகபட்ச சம்பளம் 15,000 ரூபாய். 


- இதன் படி, ஓய்வூதியத்தின் அதிகபட்ச மாதந்திர பங்கு - ரூ.15,000×8.33= ரூ.1250. 


- அதிகபட்ச பங்களிப்பு மற்றும் சேவை ஆண்டுகளின் அடிப்படையில் EPS ஓய்வூதியக் கணக்கீட்டைப் பார்த்தால், EPS = 15000 x35/70 = மாதத்திற்கு ரூ 7,500. 


- இதன் மூலம், பணியாளர்கள் இபிஎஸ் மூலம் அதிகபட்ச ஓய்வூதியமாக ரூ.7,500 வரையிலும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1,000 வரையிலும் பெறலாம் என்பது தெளிவாகிறது. 


- இந்த ஃபார்முலா மூலம் பணியாளர்கள் தங்கள் ஓய்வூதியத் தொகையை கணக்கிடலாம்.


மேலும் படிக்க | செப்டம்பரில் டிஏ ஹைக்: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரும்? முழு கணக்கீடு இதோ


நிறுவனங்கள் இபிஎஃப் உறுப்பினரின் (EPF MEmbers) சம்பளத்தில் 3.67 சதவீதத்தை EPF கணக்கிலும், 8.33 சதவீதத்தை EPS கணக்கிலும் செலுத்துகின்றன. FY24-25க்கான வட்டி விகிதம் 8.25 சதவீதம் ஆகும். இபிஎஃப் கணக்கிற்கு (EPF Account) ஊழியர் மற்றும் முதலாளியின் மொத்த பங்களிப்பு ரூ.2,350 ஆகும்.


ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். 


ஒரு ஊழியர் ஏப்ரல் 2024 இல் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார் என வைத்துக்கொள்ளலாம். அவரது அடிப்படை சம்பளம் ரூ 1,5000 என்று வைத்துக்கொள்வோம். ஏப்ரல் மாதத்திற்கான அவரது மொத்த EPF பங்களிப்பு ரூ.2,350 ஆக இருக்கும். ஏப்ரல் மாதத்திற்கு EPF திட்டத்தில் வட்டி எதுவும் செலுத்தப்படாது. மே மாதத்தில், மொத்த EPF பங்களிப்பு ரூ. 4,700 (ரூ. 2,350+ரூ. 2,350) ஆக இருக்கும். இதற்கான வட்டி ரூ. 32.31 (ரூ. 4,700*0.689%). பணியாளர் ஓய்வு பெறும் வரை இந்தக் கணக்கீடு தொடரும்.


அடிப்படை ஊதியம் ரூ. 15,000 ஆக இருந்தால் அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?


- மாத சம்பளம் (அடிப்படை+டிஏ)= ரூ 15,000
- EPF-இல் பங்களிப்பு - அடிப்படை சம்பளத்தில் 12%
- தற்போதைய வயது - 25 வயது


இந்த தரவுகளின் படி உறுப்பினர் முதலீடு செய்த மொத்த தொகை ரூ.10,15,416 ஆக இருக்கும். வட்டித்தொகை ரூ.50,37,234 ஆக இருக்கும். மொத்தத்தில் ஊழியருக்கு ரூ.60,52,650 கிடைக்கும். இந்த கணக்கீடு 8.25 சதவீதம் என்ற தற்போதைய வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில் மாற்றங்கள் வரக்கூடும். 


மேலும் படிக்க | PMAY-Urban 2.0 திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி: யார் விண்ணப்பிக்கலாம்? விதிமுறைகள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ