மத்திய மற்றும் மாநில அரசுகளால் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்த விலையில் அல்லது இலவசமாக கோதுமை, அரிசி, எண்ணெய், பருப்பு, சோளம் போன்ற உணவுப்பொருட்களை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது.  இந்த சிறப்பான திட்டத்தின் மூலம் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு உணவு மானியமாக ரூ.3.91 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.  மேலும் நாடு முழுவதும் இதுவரை 1,118 லட்சம் டன் ரேஷன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.  மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் இந்த இலவச உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு நீங்கள் பயன்பெற வேண்டுமென்றால் உங்களிடம் ரேஷன் கார்டு இருக்க வேண்டியது அவசியமாகும்.  இப்போது உங்கள் குடும்பத்தில் புதிதாக ஒருவரின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க விரும்பினால் நீங்கள் வெளியில் அலைய வேண்டியதில்லை, ஆன்லைனிலேயே இந்த செயல்முறையை செய்து முடிக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | திருப்பதி செல்லும் பக்தர்கள் இதை தெரிஞ்சுக்காம போகாதீங்க..! கட்டணங்கள் உயர்வு


புதிய உறுப்பினரின் பெயரைச் சேர்க்க, குடும்பத் தலைவரிடம் ரேஷன் கார்டு மற்றும் அதன் நகல் இருக்க வேண்டும்.  குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் அவர்களின் பெற்றோரின் ஆதார் அட்டைகள் இதற்கு வேண்டும்.  புதிதாக திருமணமான பெண்ணாக இருந்தால் அந்த பெண்ணினுடைய ஆதார் அட்டை, திருமணச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ரேஷன் கார்டு இருக்க வேண்டும்.  ஆதார் அட்டை இப்போது முக்கியமான அடையாள ஆவணமாக இருந்து வந்தாலும், பெரும்பாலும் அடையாள அட்டையை சரிபார்க்க தேவையான முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டும் கருதப்படுகிறது.  ரேஷன் கார்டு வைத்திருப்பதால் நீங்கள் அரசாங்கம் வழங்கக்கூடிய பல இலவசமான நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ளலாம்.  ஆன்லைனில் புதிய உறுப்பினரின் பெயரைச் சேர்க்க, உங்கள் மாநிலத்தின் உணவு விநியோகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.  உதாரணமாக நீங்கள் உத்தரபிரதேசத்தில் வசிக்கிறீர்களா என்றால், உத்திரபிரதேசத்தின் இணையதள பக்கமான https://fcs.up.gov.in/FoodPortal.aspx என்பதற்கு செல்லவேண்டும்.


ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரைச் சேர்க்க நீங்கள் செய்யவேண்டியவை:


1. ஒரு லாகின் ஐடியை உருவாக்க வேண்டும் அல்லது ஏற்கனவே ஐடி இருந்தால் அதனை வைத்து லாகின் செய்யலாம்.


2. இப்போது திரையில் புதிய உறுப்பினரைச் சேர்க்கும் ஆப்ஷன் இருக்கும், அதனை நீங்கள் கிளிக் செய்யவேண்டும்.


3. ஒரு புதிய படிவம் திறக்கப்பட்டு, புதிய குடும்ப உறுப்பினரின் அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்ப வேண்டும்.


4. படிவத்துடன் தேவையான ஆவணங்களின் சாஃப்ட் காபியை அப்லோட் செய்யவேண்டும்.


5. படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு ஒரு ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் கிடைக்கும்.


6. போர்ட்டலில் படிவத்தைக் கண்காணிக்க இந்தப் பதிவு எண்ணை நீங்கள் பயன்படுத்தலாம்.


7. படிவம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து, அதன் பின்னர் படிவம் ஏற்றுக்கொள்ளப்படும். பின்னர் புதிய பெயர் சேர்க்கப்பட்டு தபால் மூலமாக ரேஷன் கார்டு உங்கள் வீட்டிற்கு அனுப்பப்படும்.


மேலும் படிக்க | இந்த 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ