ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள பணியாளர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதற்கான கடைசி தேதியை அறிவித்துள்ளது. ஏற்கனவே மார்ச் 3 ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஊழியர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலவகாசத்தை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்துறள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, செப்டம்பர் 1, 2014 -க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்கள் தாங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு பத்தி 11(3)-ன் கீழ் விருப்பத்தைப் பயன்படுத்திய ஊழியர்கள் அதிக ஊதியத்தில் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள். இது தொடர்பான அறிவுறுத்தல்கள் 29.12.2022 மற்றும் 05.01.2023 தேதியிட்ட சுற்றறிக்கையின் மூலம் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 


மேலும் படிக்க | மாதம் ரூ.50,000 ஓய்வூதியம் பெற வேண்டுமா? இத மட்டும் பண்ணுங்க போதும்!


கூடுதலாக, செப்டம்பர் 1, 2014-க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கூட்டு விருப்பங்களைச் சரிபார்ப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆன்லைன் வசதி மற்றும் அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு கூட்டு விருப்பங்களைப் பயன்படுத்தியவர்களுக்கு மார்ச் 3, 2023 வரை EPFO இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளதாக அமைப்பு தெரிவித்துள்ளது. இப்போது, பணியாளர்கள் / முதலாளிகள் சங்கங்களின் கோரிக்கையின் பேரில், மத்திய அறங்காவலர் குழுவின் தலைவர், அத்தகைய ஊழியர்களிடமிருந்து கூட்டு விருப்பங்களை சரிபார்ப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான நேரத்தை மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள ஊழியர்களுக்கான வழிகாட்டுதல்களை ஓய்வூதிய நிதி அமைப்பு கடந்த மாதம் வெளியிட்டது. செப்டம்பர் 1, 2014-ல் இபிஎஸ் உறுப்பினர்களாக இருந்த பணியாளர்கள், அவர்களின் உண்மையான அடிப்படைச் சம்பளத்தில் 8.33 சதவிகிதம் வரை பங்களிக்க வாய்ப்பு கிடைக்கும். 


எப்படி விண்ணப்பிப்பது?


கடந்த மாதத்தின் பிற்பகுதியில், EPFO ஆனது ஒருங்கிணைந்த உறுப்பினர்களின் போர்ட்டலின் url-ஐ செயல்படுத்தியுள்ளது. அதில் அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் சந்தாதாரர்கள் மே 3, 2023-க்குள் விண்ணப்பிக்கலாம். 


EPFO போர்ட்டலில் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான படிகள்:


- உறுப்பினர் இ-சேவா போர்ட்டலைப் பார்வையிடவும் - https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/
- அதிக சம்பளத்தில் ஓய்வூதியத்தை கிளிக் செய்யவும் (pension on higher salary: exercise of joint option)
- பின்னர், கூட்டு விருப்பங்களுக்கான விண்ணப்பப் படிவத்தைத் (joint options) தேர்ந்தெடுக்கவும்
- உங்கள் UAN, பெயர், DOB, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிடவும்
- உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்
- விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்தவுடன் ஒரு ஒப்புகை எண் உருவாக்கப்படும்.


மேலும் படிக்க | 8th Pay commission: 8-வது ஊதியக் குழு அமல்படுத்தினால் ஊழியர்களுக்கு இவ்வளவு நன்மைகளா?


மேலும் படிக்க | வெறும் ரூ.50 முதலீட்டில் ரூ.35 லட்சம் வரை வருமானம் தரும் அசத்தல் திட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ