EPF Claim நிராகரிக்கப்படுவதை எப்படி தவிர்ப்பது? இந்த செக் லிஸ்டில் கவனம் செலுத்தினால் போதும்
EPF Claim Rejection: பிஎஃப் கணக்கிலிருந்து (PF Account) பணத்தை எடுக்கும்போது பிஎஃப் சந்தாதாரர்கள் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
EPF Claim Rejection: பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தனிநபர்களுக்கு அவர்களின் ஓய்வு காலத்தில் முக்கியமான நிதிப் பாதுகாப்பாக செயல்படுகிறது. பணி ஓய்வுக்குப் பிறகு, இதன் உறுப்பினர்கள் மொத்தமாக பணத்தை எடுக்கலாம். இருப்பினும், இபிஎஃப் குழந்தைகளின் கல்வி, தனது திருமணம், மகன், மகள், சகோதரன் மற்றும் சகோதரியின் திருமணம், மருத்துவ அவசர தேவைகள், வீடு கட்டுதல், புதுப்பித்தல் போன்றவற்றிற்கு உறுப்பினருக்கு பணம் தேவைப்பட்டாலும், பணி ஓய்வுக்கு முன்னரே பணம் எடுக்க (premature withdrawals) அனுமதிக்கிறது.
எனினும், பிஎஃப் கணக்கிலிருந்து (PF Account) பணத்தை எடுக்கும்போது பிஎஃப் சந்தாதாரர்கள் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இபிஎஃப்ஒ (EPFO) உறுப்பினர்கள் தேவை ஏற்படுகையில் பணம் எடுக்க க்ளெய்ம் செய்யும்போது, அதாவது பணத்தை கோரும்போது, சில சமயம் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதும் உண்டு. அப்படி க்ளெய்ம்கள் நிராகரிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிஎஃப் க்ளெய்ம் நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியமான காரணங்களை புரிந்துகொண்டு அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து உங்களைக் காப்பாற்றும். உங்கள் EPF தொகையை திரும்பப் பெறும் க்ளெய்ம் நிராகரிக்கப்படுவதற்கான எட்டு பொதுவான காரணங்கள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை இங்கே காணலாம்.
முழுமையற்ற ஆவணங்கள்
உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு போன்ற தேவையான அனைத்து ஆவணங்களும் சரியாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆவணங்கள் அனைத்தும் முழுமையாக ஒழுங்காக இல்லாமல் இருப்பதும் ஆவணங்கள் நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம்.
தவறான விவரங்கள்
உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் EPF கணக்கு எண் உள்ளிட்ட துல்லியமான தனிப்பட்ட விவரங்களை இருமுறை சரிபார்த்து வழங்கவும். இதில் முரண்பாடுகள் இருந்தால் அது நிராகரிப்புக்கு வழிவகுக்கும்.
ஆதார் மற்றும் வங்கி விவரங்களை சரியில்லாமல் இருப்பது
உங்கள் ஆதார் அட்டை மற்றும் வங்கி விவரங்கள் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். சரிபார்க்கப்படாத தகவல் உங்கள் க்ளெய்மை நிராகரிக்கக்கூடும்.
நிறுவனத்தின் தரப்பில் முரண்பாடுகள்
EPF பதிவுகளில் நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய தேதி மற்றும் வெளியேறுவதற்கான காரணத்தை உங்கள் நிறுவனம் புதுப்பித்துள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்திற்கும் உங்கள் முதலாளி / நிறுவனத்தின் பதிவுகளுக்கும் இடையில் தகவல்கள் பொருந்தாவிட்டால், உங்கள் க்ளெய்ம் நிராகரிக்கப்பட அது வழிவகுக்கும்.
EPF விதிகளுக்கு இணங்காதது
EPF தொகையை திரும்பப் பெறும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த விதிகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், உங்கள் க்ளெய்ம் நிராகரிக்கப்படலாம்.
நிலுவையில் உள்ள கடன் பாக்கி
தொகையை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் உங்கள் EPF கணக்கில் கடன் இருப்பை செலுத்தவும். நிலுவையில் உள்ள கடன் காரணமாகவும் உங்கள் இபிஎஃப் க்ளெய்ம் (EPF Claim) நிராகரிக்கப்படலாம்.
செயலற்ற EPF கணக்கு
பணம் எடுக்கும்போது (EPF Withdrawal) உங்கள் EPF கணக்கு செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீண்ட கால வேலையின்மை காரணமாக கணக்குகள் செயலற்ற நிலையில் இருந்தாலும், உங்கள் க்ளெய்ம் நிராகரிக்கப்படலாம்.
பிஎஃப் பரிமாற்றத்தில் தாமதம்
நீங்கள் வேலை மாறியிருந்தால், உங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு உங்கள் முந்தைய நிறுவனத்திடமிருந்து தற்போதைய நிறுவனத்திற்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது மாற்றப்படாவிட்டாலும் க்ளெய்ம் நிராகரிக்கப்படலாம்.
பிஎஃப் க்ளெய்ம் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
ஆவணங்களை சரியாக சரிபார்க்கவும்
உங்கள் க்ளெய்ம் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன், அனைத்து ஆவணங்களும் விடுபடாமல் சரியாக இருப்பதையும், அனைத்தும் சரியாக இருப்பதையும் உறுதிபடுத்திக் கொள்ளவும்.
தனிப்பட்ட விவரங்களைத் தொடர்ந்து புதுப்பிக்கவும்
உங்களின் தனிப்பட்ட விவரங்களை உங்கள் நிறுவனத்தின் பதிவுகள் மற்றும் EPF கணக்குகள் இரண்டிலும் புதுப்பித்து துல்லியமாக வைத்திருங்கள்.
தகவலறிந்துகொள்ளுங்கள்
கவனக்குறைவாக இல்லாமல் EPF விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.
நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துங்கள்
பிஎஃப் தொகையை திரும்பப் பெறும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், கடன்கள் போன்ற நிலுவைத் தொகைகளை செட்டில் செய்யவும்.
வேலைவாய்ப்பு விவரங்களைச் சரிபார்க்கவும்
EPF பதிவுகளில் நிறுவனத்திலிருந்து நீங்கள் வெளியேறிய விவரங்களை உங்கள் நிறுவனம் சரியாக புதுப்பித்துள்ளதா என்பதை செக் செய்துகொள்ளவும்.
EPF தொகையை திரும்பப் பெறும் செயல்முறை சற்று சிக்கலானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் க்ளெய்ம் நிராகரிக்கப்படுவதற்கான பொதுவான காரணங்களைப் புரிந்துகொண்டு அவற்றை நிவர்த்தி செய்தால் சுலபமாகவும், வெற்றிகரமாகவும் இந்த செயல்முறையை செய்து முடிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ