கிராஜுவிட்டி கணக்கீட்டில் நோட்டீஸ் பீரியடும் சேர்க்கப்படுமா? இதற்கான விதிகள் என்ன?
Gratuity: பொதுவாக, பணிக்கொடை பெறுவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக ஊழியர்கள் மத்தியில் பல கேள்விகளும் உள்ளன.
Gratuity: ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் நீண்ட காலம் நன்றாக வேலை செய்தால், அந்த நிறுவனம் அவரை தனது விசுவாசமான பணியாளராகக் கருதுகிறது. அவரது சிறந்த சேவைகளுக்காக, நிறுவனத்தின் மூலம் வெகுமதி பணம் வழங்கப்படுகிறது. இது பணிக்கொடை அதாவது கிராஜுவிட்டி என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக, பணிக்கொடை பெறுவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக ஊழியர்கள் மத்தியில் பல கேள்விகளும் உள்ளன. ஒரு ஊழியர் 4 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் பணிபுரிந்து, அதன் பிறகு அவர் 2 மாதங்கள் நோட்டீஸ் காலத்தில் பணியாற்றினால், அத்தகைய சூழ்நிலையில், அவரது நோட்டிஸ் பீரியட் அவரது கிராஜுவிட்டி கணக்கீட்டில் கணக்கிடப்படுமா? கிராஜுவிட்டி கணக்கீட்டுக்கான விதிகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
5 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு பணி புரிந்தாலும் பணிக்கொடை கிடைக்கும்
- பணிக்கொடை பெற 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
- ஆனால் ஒரு ஊழியர் நிறுவனத்தில் 4 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் பணியாற்றியிருந்தாலும், அவர் கருணைத் தொகைக்கு தகுதியானவராகக் கருதப்படுகிறார்.
- இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், 4 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் கொண்ட காலம் முழு 5 ஆண்டுகளாகக் கருதப்படுகின்றது.
- இதன் அடிப்படையில், அவருக்கு 5 ஆண்டுகளின் படி கிராஜுவிட்டி தொகை வழங்கப்படுகிறது.
- ஆனால் அவர் 4 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களுக்கும் குறைவாக பணிபுரிந்திருந்தால், அவரது பணிக்காலம் 4 ஆண்டுகளாக மட்டுமே கணக்கிடப்படும்.
- அத்தகைய சந்தர்ப்பத்தில் அவருக்கு பணிக்கொடை கிடைக்காது.
மேலும் படிக்க | இவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது: இதை செக் செய்துகொள்ளுங்கள்
கிராஜுவிட்டி நோட்டீஸ் பீரியடும் கணக்கிடப்படுமா?
விதியின் படி, ஒரு ஊழியரின் பணிக்காலத்தை கணக்கிடும் போது, அவரது நோட்டீஸ் பீரியடும் கணக்கிடப்படுகிறது. ஏனெனில் அந்த காலகட்டத்திலும் பணியாளர் தனது சேவைகளை நிறுவனத்திற்கு வழங்குகிறார். உதாரணத்திற்கு ஒரு பணியாளர் நான்கரை ஆண்டுகள் அதாவது 4 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் பணிபுரிந்த பிறகு, ஒரு நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் ராஜினாமா செய்த பிறகு, அவர் நோட்டீஸ் பீரியடாக இரண்டு மாதங்களுக்கு பணி புரிகிறார். இந்த சூழலில் அவரது பணிக்காலம் 4 ஆண்டுகள் 8 மாதங்களாகத்தான் கணக்கிடப்படும். இது 5 ஆண்டுளாக கருதப்பட்டு கிராஜுவிட்டி வழங்கப்படும்.
இந்த சூழ்நிலையில் 5 ஆண்டு விதி இல்லை
- பணிக்கொடைச் சட்டம் 1972-ன் படி, ஒரு ஊழியர் விபத்தில் இறந்தாலோ அல்லது ஊனமுற்றாலோ, அவரால் மீண்டும் வேலை செய்ய முடியாமல் போனாலோ, அவருக்கு பணிக்கொடை வழங்குவதற்காக 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற விதி பொருந்தாது.
- அத்தகைய சூழ்நிலையில், கிராஜுவிட்டி தொகையானது நாமினி அல்லது சார்ந்திருப்பவருக்கு வழங்கப்படும்.
- பணியாளர்கள் பணியில் சேரும்போது, படிவம் F-ஐ (Form F) பூர்த்தி செய்து, தங்களது பணிக்கொடை தொகைக்கான நாமினியின் பெயரையும் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | EPS 95 குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் ஏற்றம்? உச்சநீதிமன்றத்துக்கு சென்ற விவகாரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ