How To Change Date of Birth in EPF: சம்பளம் பெறும் வகுப்பினர் அடிப்படைச் சம்பளத்தில் 24 சதவீதத்தை பிஎஃப் வடிவில் பெறுகிறார்கள். இதற்காக, 12 சதவீதம் ஊழியரின் சம்பளத்திலிருந்து டெபாசிட் செய்யப்படுகிறது, மீதமுள்ள 12 சதவீதம் நிறுவனத்தால் டெபாசிட் செய்யப்படுகிறது. நீங்களும் மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் (EPF Account) செய்யும் நபரா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் இருந்து உங்கள் PF பிடித்தம் செய்யப்படுகின்றது. ஆனால் உங்கள் KYC யில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஒரு சிறிய தவறு இருந்தால் கூட, அதன் காரணமாக உங்கள் லட்சக்கணக்கான மதிப்புள்ள சேமிப்பு சிக்கிக்கொள்ளலாம். 


பெரும்பாலும் EPF கணக்கில் இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) செய்யும் தவறுகள் அவர்களால் கவனிக்கப்படாமல் போய்விடுகின்றன. KYC இன் அப்டேட் செய்யப்படாம்ல் இருந்தால், EPF கணக்கிற்கு வட்டி பணத்தை மாற்றுவதில் சிரமம் ஏற்படும் என EPFO ​​இலிருந்து அவ்வப்போது அப்டேட் வருகின்றது. 


EPFO இல் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் சரியாக இருக்க வேண்டும்


விவரங்கள் சரியாக இல்லையென்றால், உங்கள் EPF பணத்தை எடுக்க முடியாது. ஆகையால், EPFO ​​இல் பதிவு செய்யப்பட்ட உங்கள் விவரங்கள் முற்றிலும் சரியாக இருப்பது முக்கியம். எனவே இவற்றை அவ்வப்போது சரிபார்த்து புதுப்பித்துக்கொண்டே இருப்பது நல்லது. EPFO பதிவுகளில் உங்கள் பிறந்த தேதி தவறாக இருந்தால், நீங்கள் அதை ஆன்லைனிலும் மாற்றலாம். வீட்டிலிருந்தபடியே இந்த வேலையை எளிதாக செய்யலாம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் அனைத்து சந்தாதாரர்களுடனும் இது பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது. EPF பதிவுகளில் பிறந்த தேதியைப் புதுப்பிக்கும் முறையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க | UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும்


EPFO ​​பதிவுகளில் பிறந்த தேதியை புதுப்பிப்பதற்கான வழிமுறை


உங்கள் பிறந்த தேதியில்  (Date of Birth) உள்ள வித்தியாசம் 3 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால், நீங்கள் EPFO யூனிஃபைட் மெம்பர் போர்ட்டலில் ஆதார் அல்லது இ-ஆதாரைச் (e-Aadhaar) சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் உங்கள் பிறந்த தேதியில் உள்ள வித்தியாசம் 3 வருடங்களுக்கும் மேலாக இருந்தால், EPFO ​​ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலில் (UAN) ஆதார் அல்லது இ-ஆதாருடன் தனியாக ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். 
அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆவணங்களை வழங்க வேண்டும்:


- உயர்நிலைப் பள்ளி அல்லது கல்வி தொடர்பான ஏதேனும் சான்றிதழ்.
- பதிவாளர் அளித்த பிறப்புச் சான்றிதழ்.
- பாஸ்போர்ட்.
- மத்திய அல்லது மாநில அரசு நிறுவனத்தின் சேவைப் பதிவுகளின் அடிப்படையிலான சான்றிதழ்.
- ஏதாவது அரசாங்கத் துறையால் வழங்கப்பட்ட ஆவணங்கள் (DL அல்லது ESIC கார்டு போன்றவை) 
- சிவில் சர்ஜனின் மருத்துவ சான்றிதழ்.


பிறந்த தேதியை (DoB) திருத்துவதற்கான கோரிக்கை EPFO ​​இன் UAN போர்ட்டலில் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்படும். இதற்கு நீங்கள் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைப்பிற்குச் செல்ல வேண்டும். 


நாமினேஷனும் அவசியம்


ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர் தனது கணக்கிற்கு ஒருவரை பரிந்துரைக்க வேண்டியது, அதாவது நாமினியை நியமிக்க வேண்டியது அவசியமாகும். இதன் மூலம், உங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், உங்கள் கணக்கின் நாமினி, உங்கள் PF கணக்கில் உள்ள தொகையை கோரலாம். பிஎஃப் உறுப்பினர் இறந்தால், அவரது குடும்ப உறுப்பினர்களில் யார் நாமினியாக நியமிக்கப்பட்டுள்ளாரோ அவர்தான் EPF தொகைக்கு உரிமை கோர முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம்.


மேலும் படிக்க | இதுவும் கடன் தான்! ஆனா டக்குன்னு கிடைக்கும்... திருப்பி செலுத்துவதும் ரொம்ப சுலபம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ