Aadhaar Card Photo Change: இந்திய குடிமக்களின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ஆதார் அட்டை அடையாள அட்டையாக பயன்படுகிறது.  அரசின் மூலம் வழங்கப்படும் பல நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் இந்த 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டையில் தனிநபரது புகைப்படம், முகவரி என அவரது தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற்று இருக்கும்.  இது தவிர ஆதார் அட்டையில் ஒவ்வொரு குடிமகனது கருவிழி, கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களும் இடம்பெற்றுள்ளது.  பத்து வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் அட்டையில் சில முக்கியமான அப்டேட்டுகளை செய்ய வேண்டியது அவசியமான ஒன்று.  ஆதார் அட்டை முக்கியமானது என்றாலும் அதில் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் பலருக்கும் பிடித்தமானதாக இல்லை.  ஆதார் அட்டையிலுள்ள புகைப்படத்தை பலரும் மாற்றவே விரும்புகின்றனர்.  அப்படி ஆதார் அட்டையிலுள்ள புகைப்படத்தை விரும்பாதவர்கள் அதனை மாற்றிக்கொள்ளலாம்.  ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமானால், அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.  இதன் மூலம் ஆதார் அட்டையிலுள்ள உங்கள் புகைப்படத்தை மாற்ற முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | EPFO மிகப்பெரிய அப்டேட்: அதிகரிக்கிறது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்!!


1) யூஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான uidai.gov.in ஐப் பார்வையிடவும் அல்லது https://uidai.gov.in/ .என்கிற இணைப்பை கிளிக் செய்யவேண்டும்.


2) அதன்பிறகு 'அப்டேட் ஆதார்' ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.


3) இப்போது ஆதார் பதிவு படிவத்தை டவுன்லோடு செய்து தேவையான விவரங்களை நிரப்பவேண்டும்.


4) பிறகு அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்கு சென்று படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


5) அங்கு இருக்கும் ஆதார் ஊழியர் அனைத்து விவரங்களையும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் சரிபார்ப்பார்.


6) உங்கள் ஆதார் அட்டையில் அப்டேட் செய்யப்படும் உங்களின் புதிய புகைப்படத்தை ஊழியர் கிளிக் செய்வார்.


7) இந்த சேவைக்கு நீங்கள் ரூ.100 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் சேர்த்து செலுத்த வேண்டும்.


8) ஆதார் ஊழியர் உங்களுக்கு அக்னாலெட்ஜ்மென்ட் சீட்டு மற்றும் அப்டேட் ரிக்வஸ்ட் எண்ணை (யூஆர்என்) வழங்குவார்.


9) செயல்முறைகள் முடிந்ததும் உங்கள் புகைப்படம் 90 நாட்களுக்குள் அப்டேட் செய்யப்படும்.


மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் புகைப்படத்தை அப்டேட் செய்யும் செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் விண்ணப்பத்தின் நிலையில் ஆன்லைனிலும் கண்காணித்துக் கொள்ளலாம்.  இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் யூஆர்என் எண்ணைப் பயன்படுத்தி உங்களது புதிய ஆதார் அட்டையின் நிலையைக் கண்காணிக்கலாம்.  நீங்கள் வழங்கிய விவரங்கள் ஆதார் போர்ட்டலில் அப்டேட் செய்யப்பட 90 நாட்கள் ஆகும்.  நீங்கள் கொடுத்த விவரங்கள் மற்றும் புகைப்படம் அப்டேட் செய்யப்பட்டதும், ஒரு புதிய நகலை டவுன்லோடு செய்து அதை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.  இருப்பினும், ஆதார் அட்டையில் புகைப்படத்தை அப்டேட் செய்யக்கூடிய முழு செயல்முறையையும் ஆன்லைனில் மட்டுமே செய்ய முடியாது, இதற்கு நீங்கள் ஆதார் பதிவு மையத்திற்கு தான் செல்ல வேண்டும்.


மேலும் படிக்க | Indian Railways மிகப்பெரிய அப்டேட்: மொபைல், லேப்டாப் சார்ஜ் செய்ய தடை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ