பான் - ஆதார் இணைக்க 1000 ரூபாய்... டெபாசிட் செய்வது எப்படி?

Pan - Aadhaar Link: பான் - ஆதாரை இணைக்க தற்போது ரூ. 1000 வசூலிக்கப்படும் நிலையில், அந்த கட்டணத்தை ஆன்லைன் செலுத்தும் செயல்முறை குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 3, 2023, 07:16 AM IST
  • தற்போது, வரும் ஜூன் 30ஆம் தேதி வரை பான், ஆதாரை இணைக்கலாம்.
  • இதற்காக, தற்போது ரூ. 1000 வசூலிக்கப்படும்.
  • முன்னதாக, கடந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இச்சேவை இலவசமாக இருந்தது.
பான் - ஆதார் இணைக்க 1000 ரூபாய்... டெபாசிட் செய்வது எப்படி? title=

Pan - Aadhaar Link: நிதி கண்காணிப்பு மற்றும் மோசடிகளை தவிர்க்கும் வகையில் அனைத்து பான் பயனர்களும் ஆதாருடன் இணைக்குமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலக்கெடுவும் பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்போது ஜூன் 30ஆம் தேதி வரை, ஆதாருடன் பான் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பான் பயனர்கள் ஜூன் 30ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டாம், ஆனால் இப்போது ஆன்லைனில் கட்டணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கலாம். 

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது ஏன் அவசியம்?

வருமான வரிச் சட்டம் 1961இன் படி, வரி விலக்கு பிரிவின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும், ஜூன் 30, 2023க்கு முன், தங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித் துறை பான் பயனாகளிடம் தெரிவித்துள்ளது. பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு-139AA இன் கீழ் 1 ஜூலை 2023 முதல் PAN ரத்து செய்யப்படும்.

மேலும் படிக்க | ஆதார் - பான் இல்லாமல் நீங்கள் இனி பணத்தை சேமிக்க முடியாது: மத்திய அரசு அறிவிப்பு

பான் இணைப்புக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதா?

வருமான வரித் துறையின் கூற்றுப்படி, கடந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை, ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் செயல்முறை இலவசமாக இருந்தது. இதற்குப் பிறகு, கடந்தாண்டு ஏப். 1ஆம் தேதியில் இருந்து, இந்த இணைப்புக்கு ரூ. 500 வசூலிக்கப்பட்டது. பின், கடந்தாண்டு ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அதனை ரூ. 1000 ஆக அதிகரித்தது.  

பின்னர், பான் - ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு இந்தாண்டு, மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்காக, PAN பயனர்கள் தாமதக் கட்டணமாக 1,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இப்போது ஜூன் 30ஆம் தேதிக்குள் பான் எண்ணை இணைக்க வேண்டும், ஆனால் இந்த முறை கட்டணம் உயர்த்தப்படவில்லை.

பான் இணைப்புக் கட்டணத்தை டெபாசிட் செய்யும் முறை என்ன?

வருமான வரித்துறையின் இணையதளத்தில், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கட்டணம் ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்த ஆன்லைன் முறையைப் பின்பற்றலாம்.

- பான் ஆதாரை இணைப்பதற்கான கோரிக்கைக்கு, பயனர்கள் முதலில் https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp அல்லது NSDL போர்ட்டலுக்கு செல்ல வேண்டும்.
- ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்க, CHALLAN NO./ITNS 280 இன் கீழ் தொடரவும் (PROCEED under CHALLAN NO./ITNS 280) என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது Select Tax Applicable என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதன் பிறகு ரூ.1,000 மற்றும் அதற்குக் குறைவான கட்டணத்தை ஒரே சலானில் செலுத்துவதை உறுதிசெய்யவும்.
- இப்போது நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யவும்.
- அதன் பிறகு பான் எண்ணை உள்ளிட்டு, குறிப்பிட்ட ஆண்டைத் தேர்ந்தெடுத்து முகவரியை உள்ளிடவும்.
- அதன் பிறகு, கேப்ட்சா குறியீட்டை நிரப்பி, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- பணம் செலுத்தியதும், வரி செலுத்துவோர் பான்-ஆதாரை இணைக்க முடியும்.

மேலும் படிக்க | PAN Aadhaar Link: இவர்கள் பான் - ஆதார் கார்டை இணைக்க தேவையில்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News