EPF பணத்தை கணக்கில் டெபாசிட் செய்ததா உங்கள் நிறுவனம்? செக் செய்வது எப்படி? எப்படி புகார் அளிப்பது?
EPFO Update: பல சமயங்களில் சில நிறுவனங்கள், பணியாளரின் ஊதியத்தில் பணத்தை கழித்து அவரது இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கின்றன, ஆனால், தங்கள் தரப்பு பணத்தை டெபாசிட் செய்வதில் தாமதப்படுத்துகின்றன.
EPFO Update: நீங்கள் அலுவலக பணியில் உள்ளீர்களா? மாதா மாதன் உங்கள் சம்பளத்திலிருந்து பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்ய பணம் கழிக்கபப்டுகின்றதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணியாளர் அளிக்கும் பங்களிப்பை போலவே நிறுவனமும் பணியாளரின் கணக்கில் மாதா மாதம் ஒரு தொகையை டெபாசிட் செய்கிறது. பல சமயங்களில் சில நிறுவனங்கள், பணியாளரின் ஊதியத்தில் பணத்தை கழித்து அவரது இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கின்றன, ஆனால், தங்கள் தரப்பு பணத்தை டெபாசிட் செய்வதில் தாமதப்படுத்துகின்றன. சில நேரங்களில் நிறுவனம் தரப்பு பணம் பணியாளரின் இபிஎஃப் கணக்கில் சேர்க்கப்படாமலேயே போகிறது.
பணியாளருக்கு போதுமான தகவல் இல்லாததால் அவர்களால் இதை பற்றிய தெளிவை பெற முடிவதில்லை. ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. ஏனென்றால் நிறுவனம் கழிக்கப்பட்ட உங்கள் பணத்யையும், நிறுவன பங்களிப்பையும் முறையாக உங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) சேர்க்கவில்லை என்றால், அது பற்றிய தகவலை இப்போது நீங்கள் எளிதாக பெற முடியும். இது மட்டுமின்றி இதில் ஏதாவது தவறு நேர்ந்திருந்தால் அதை பற்றி இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) எளிதாக நிறுவனம் மீதும் புகார் அளிக்கலாம். ஆகையால், உங்கள் EPF கணக்கை தொடர்ந்து சரிபார்ப்பது முக்கியம். இதன் மூலம் சாத்தியமான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
ஒருவேளை உங்கள் நிருவனம் பணத்தை டெபாசிட் செய்யாமல் உங்களை ஏமாற்றுகிறது என உங்களுக்கு தோன்றினால், அதை பற்றி நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும் செயல்முறை பற்றி இங்கே காணலாம்.
இது குறித்த சில முக்கியமான விஷயங்கள் இதோ
உங்கள் EPF கணக்கில் நிறுவனம் பங்களிக்கவில்லை என்றால், நீங்கள் உடனடியாக அதைப் பற்றி புகார் செய்யலாம். இது எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது. இதைப் பற்றி நீங்கள் EPFO க்கு எளிதாக புகார் அளிக்கலாம். இதை பற்றிய புகாரை நீங்கள் ஆன்லைனில் செய்யலாம்.
- இதைச் செய்ய, முதலில் நீங்கள் PFIGMS -இன் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் சென்று அதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது நீங்கள் PF அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம், இது எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது.
- இது குறித்து புகார் அளித்தால், அதனுடன் சில ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
- புகார் செய்வதற்கு முன் தேவையான ஆவணங்களை சேகரித்து வைத்துக்கொள்ளவும்.
- இதனுடன், உங்கள் சம்பளத்தில் இருந்து PFக்கான பணம் பிடித்தம் செய்யப்பட்டு, அந்த பணம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரத்தை நீங்கள் வழங்க வேண்டும்.
- இந்தச் சான்றுக்கு உங்கள் சம்பளச் சீட்டு (Salary Slip) அல்லது EPF கணக்கு அறிக்கை போதுமானதாக இருக்கும்.
- நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் பணியாளர் சுய சேவை போர்ட்டலில் (Self Service Portal) பதிவேற்றுகிறது.
மேலும் படிக்க | மத்திய அரசின் இலவச காப்பீடு... ஆயுஷ்மான் அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை!
புகார் செய்வது எப்படி என்று இங்கே காணலாம்
- இதைச் செய்ய, நீங்கள் EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று கிளிக் செய்ய வேண்டும்.
- இங்கே உங்கள் யுனிவர்ஸ் கணக்கு எண்ணின் (UAN) உதவியுடன் உங்கள் கணக்கில் லாக் இன் செய்ய வேண்டும்.
- பின்னர் 'Get Details' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் UAN தொடர்பான அனைத்து தகவல்களையும் எளிய முறையில் பெறுவீர்கள்.
- நீங்கள் OTP ஐ கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
- OTP ஐ உள்ளிட்ட பிறகு நீங்கள் 'OK' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது உங்கள் பெயர், பாலினம், மொபைல் எண் போன்ற பிற தகவல்களை வழங்க வேண்டும்.
- இதற்குப் பிறகு, உங்கள் ஆவணங்களை மீண்டும் பதிவேற்ற வேண்டும்.
- பின்னர் புகார் பதிவு செய்யப்பட்டதும், உங்களுக்கு ஒரு செய்தி வழங்கப்படும்.
மேலும் படிக்க | உங்க சேலரி ஸ்லிப்பில் இருக்கு வருமான வரி விலக்கு பெறுவதன் ரகசியம்: இதோ விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ