பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது மத்திய அரசால் நடத்தப்படும் சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டமாகும். நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் ஓய்வு காலத்திற்கான நிதியை சேர்க்க இந்த திட்டம் உதவுகிறது. PPF முதலீட்டின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், அதை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். PPF கணக்கை நீட்டிப்பதன் மூலம் மிக பெரிய அளவிலான நிதியை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், வரி இல்லாத வழக்கமான வருமானத்தையும் ஈட்ட முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடீஸ்வரராக்க உதவும் திட்டம்


பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால், எளிதில் கோடீஸ்வரராகலாம். PPF என்பது 15 ஆண்டுகள் முதிர்வு கொண்ட ஒரு திட்டமாகும். இதில் ஆண்டுக்கு 7.1 சதவிகிதம் உத்தரவாத வருமானம் வழங்கப்படுகிறது. PPF கணக்கில் ஒரு வருடத்தில் குறைந்தது 500 ரூபாய் முதலீடு செய்வது அவசியம். இதில், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். 


கோடீஸ்வரர் ஆக உதவும் 15 + 5 + 5 சூத்திரம்


PPF கணக்கில் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்த நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு இரண்டு முறை நீட்டித்தால், ஒரு கோடி ரூபாயை எளிதாக சேர்க்கலாம். இந்த திட்டத்தில் அதிகபட்ச வரம்பு வரை முதலீடு செய்வதன் மூலம் தான், அதிகபட்ச கார்பஸை உருவாக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


கணக்கை நீட்டிப்பது தொடர்பான விதிகள்


15 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பிறகு, PPF கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% என்ற அளவில் வழங்கப்படும் நிலையில், 15 + 5 + 5 என்ற ஃபார்முலாவின் அடிப்படையில், 25 ஆண்டுகளில் ரூ.1 கோடி நிதியை உருவாக்கலாம். இதற்காக, 25 ஆண்டுகளில் ரூ.37,50,000 முதலீடு செய்திருக்க வேண்டும். இதில் மொத்தம் ரூ.65,58,015 வட்டி வருமானம் கிடைக்கும்.


15 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் தொகை


அதிகபட்ச வருடாந்திர முதலீடு: ரூ 1,50,000


வட்டி விகிதம்: ஆண்டுதோறும் 7.1% 


15 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ 22,50,000


15 ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்ச்சியின் போது கிடைக்கும் தொகை: ரூ 40,68,209


வட்டி வருமானம்: ரூ.18,18,209


மேலும் படிக்க | 60வது வயதில் மாதம் ₹61,000 பென்ஷன் பெற... PPF கணக்கில் இவ்வாறு முதலீடு செய்யவும்


PPF கணக்கை 5 + 5 ஆண்டுகள் நீட்டித்தால் கிடைக்கும் தொகை


25 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ.37,50,000.


வட்டி வருமானம்: ரூ.65,58,015


25 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் தொகை: ரூ 1.03 கோடி


வரியில்லா வருமானம்


ரூ.1 கோடி நிதி திரட்டிய பிறகு, அதிலிருந்து மாத வருமானம் பெற விரும்பினால், எதையும் முதலீடு செய்யாமல் 5 ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டிக்கும் ஆப்ஷனும் உள்ளது. இதில் ரூ.1 கோடிக்கு 7.1 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கும். இது ஒரு வருடத்தில் ரூ.7,31,300 ஆக இருக்கும். ஒரு வருடத்தில் முழு வட்டித் தொகையையும் திரும்பப் பெறலாம். இதனை 12 மாதங்களில் பிரித்தால், ஒரு மாதத்தில் சுமார் 60,000 ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்துக்கு வருமான வரி கிடையாது என்பது தான் இதன் சிறப்பு.


PPF கணக்கைத் திறக்க தேவையான ஆவணங்கள்


1. PPF கணக்கைத் திறக்க, எந்த அங்கீகரிக்கப்பட்ட வங்கியிலிருந்தும் படிவம் A பெற வேண்டும்.
 
2. அடையாளத்தை உறுதி செய்ய ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவை KYC ஆவணங்களாகப் பயன்படுத்தப்படலாம்.


3. முகவரி ஆதாரம்


4. பான் கார்டு
 
5. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்


7. PPF கணக்கைத் திறக்க அங்கீகரிக்கப்பட்ட எந்த வங்கியிலிருந்தும் நாமினி படிவம் E சேகரிக்கப்படலாம்.


PPF கணக்கிற்கான வட்டி விகிதம் நீண்ட காலமாக மாறாமல் உள்ளது. PPF மீதான வட்டி விகிதம் கடைசியாக அக்டோபர் 1, 2018 அன்று உயர்த்தப்பட்டது. அப்போது அரசு வட்டி விகிதத்தை 7.60 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியது. ஆனால் அதன் பிறகு அதிகரிக்காமல் குறைத்து விட்டது. ஏப்ரல் 1, 2020 முதல், PPF கணக்கின் வருடாந்திர வட்டி விகிதம் 7.1% ஆக உள்ளது.


மேலும் படிக்க | NPS: ரூ.50,000 மாத ஓய்வூதியம் அளிக்கும் அட்டகாசமான அரசாங்க திட்டம்.... முழு கணக்கீடு இதொ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ