60வது வயதில் மாதம் ₹61,000 பென்ஷன் பெற... PPF கணக்கில் இவ்வாறு முதலீடு செய்யவும்

PPF: ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.60,989 என்ற அளவில் வழக்கமான ஓய்வூதியத்தைப் பெறவும், அதுவும் முற்றிலும் வரி விலக்குடன் கூடிய வருமானத்தை பெறவும் கணக்கில் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 25, 2024, 05:29 PM IST
  • PPF கணக்கில் புதிய முதலீடு செய்யாமல் ரூ.7,31,869 வட்டி கிடைக்கும்.
  • EEE வகை திட்டமான PPF கணக்கிற்கு வரி விலக்கு.
  • PPF கணக்கிலிருந்து ரூ.60,989 மாதாந்திர ஓய்வூதியம் பெற செய்ய வேண்டியது என்ன?
60வது வயதில் மாதம் ₹61,000 பென்ஷன் பெற... PPF கணக்கில் இவ்வாறு முதலீடு செய்யவும் title=

PPF கணக்கு என்பது மத்திய அரசால் நடத்தப்படும் மிகவும் பிரபலமான சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இது எதிர்காலத்திற்காகச் சேமிக்கவும், வரியில்லா வட்டியைப் பெறவும் வாய்ப்பளிக்கிறது. மேலும், இதில் திட்டமிட்டு முதலீடு செய்தால், ய்வு பெறும் போது கோடீஸ்வரர் ஆகலாம்.

PPF கணக்கை தொடங்கும் முறை

முதலாவதாக, மிகவும் பிரபலமான சேமிப்புத் திட்டமான PPF இல், எந்தவொரு இந்தியரும் எந்தவொரு தபால் அலுவலகத்திற்கும் அல்லது எந்தவொரு வங்கியின் கிளைக்கும் சென்று கணக்கைத் தொடங்கலாம். அதில் கணக்கு வைத்திருப்பவர் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.500 மற்றும் அதிகபட்சம் ரூ.1,50,000 டெபாசிட் செய்யலாம்.

EEE வகை திட்டமான PPF கணக்கிற்கு வரி விலக்கு

PPF கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது, இந்தக் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் பெறும் வட்டிக்கும் வரி விதிக்கப்படாது முதிர்வு நேரத்தில் பெறப்படும் தொகையும் வருமான வரியின் கீழ் வராது.

ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.61000 ஓய்வூதியம் பெற 35வது வயதில் PPF கணக்கைத் திறந்து ரூ.1,50,000 டெபாசிட் செய்ய வேண்டும். மத்திய அரசின் நரேந்திர மோடி அரசு PPF-ல் முதலீடு செய்யும் தொகைக்கு 7.1 சதவீத வட்டியை செலுத்துகிறது. இதற்கு ஆண்டின் தொடக்கத்திலேயே, ரூ.1,50,000 டெபாசிட் செய்தால் வட்டி வருமானம் அதிகரிக்கும். அதாவது PPF முதலீட்டாளர், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் 5 வரை உங்கள் PPF கணக்கில் ₹ 1,50,000 டெபாசிட் செய்து வந்தால், முதிர்வு நேரத்தில், அதாவது 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ.40,68,209 உங்கள் PPF கணக்கில் இருக்கும். அதில் ரூ.18,18,209 வட்டித் தொகையாக இருக்கும், மேலும் உங்கள் அசல் முதலீடு ரூ.22,50,000 என்ற அளவில் இருக்கும்.

நீங்கள் 35 வயதில் PPF கணக்கைத் திறந்திருந்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு 50 வயதாகியிருக்கும், ஆனால் ஓய்வு பெற இன்னும் 10 ஆண்டுகள் உள்ளன. PPF கணக்கு தொடர்பான விதிகளின்படி, உங்கள் PPF கணக்கை முதிர்ச்சியடைவதற்கு முன் விண்ணப்பித்து 5 ஆண்டுகளுக்குள் நீட்டிக்கலாம். எவ்வளவு முறை வேண்டுமானாலும், ஐந்து ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டிக்கலாம் .

உங்கள் கணக்கை நீடித்து, 50 வயதில், வருடாந்திர முதலீட்டை தொடரும் நிலையில், உங்களுக்கு 55 வயதாகும் போது உங்கள் PPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ.66,58,288 ஆக இருக்கும், அதில் ரூ.36,58,288 வட்டியாக இருக்கும், மேலும் உங்கள் முதலீடு ₹ 30,00,000 ஆக இருந்திருக்கும். இப்போது மீண்டும் ஒருமுறை PPF கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, முன்பைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,50,000 முதலீடு செய்யுங்கள்.

​​உங்களுக்கு 60 வயது ஆகும் போது, உங்கள் பிபிஎஃப் கணக்கில் உள்ள மொத்தத் தொகை ஒரு கோடியைத் தாண்டியிருக்கும். அந்த நேரத்தில், உங்கள் PPF கணக்கில் மொத்தம் ரூ.1,03,08,014 இருக்கும். அதில் உங்கள் முதலீடு ரூ.37,50,000 என்ற அளவிலும், இது வரை உங்கள் கணக்கில் பெற்ற வட்டி ரூ.65,58,015 என்ற அளவிலும் இருக்கும்.

PPF கணக்கிலிருந்து ₹60,989 மாதாந்திர ஓய்வூதியம் பெற செய்ய வேண்டியது

உங்கள் PPF கணக்கை நீட்டிக்கும் போதெல்லாம், உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. ஒன்று - நீட்டிப்புக்குப் பிறகு முதலீடினை தொடர்வது. இரண்டு - நீட்டிப்புக்குப் பிறகு முதலீட்டை தொடராமல் இருப்பது. இதுவரை நீங்கள் உங்கள் கணக்கை இரண்டு முறை நீட்டித்த நிலையில், உங்கள் முதலீட்டை நிறுத்தவில்லை. எனவே தொகை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் இப்போது ஓய்வுக்குப் பிறகு முதலீட்டை தொடர்வது எளிதாக இருக்காது. எனவே இப்போது புதிய முதலீடுகளைச் செய்யாமல் ஓய்வூதியம் பெறும் நேரம் வந்துவிட்டது எனலாம்.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: மத்திய அரசின் 1 எச்சரிக்கை, 2 குட் நியூஸ்

PPF கணக்கில் புதிய முதலீடு செய்யாமல் ரூ.7,31,869 வட்டி கிடைக்கும்

இப்போது நீங்கள் இந்த ஆண்டு புதிய முதலீடுகளைச் செய்யாமல் கணக்கைத் தொடருவீர்கள். எனவே, இந்த முறை உங்கள் கணக்கில் உள்ள வைப்புத்தொகை ரூ.1,03,08,014 ஆக இருக்கும், மேலும் ஆண்டின் இறுதியில் அதற்கான வட்டி ரூ.7,31,869 ஆக இருக்கும். 

முதலீடு செய்யாமல் PPF கணக்கை நீட்டிக்க நீங்கள் தேர்வு செய்யும் போது, ​​ஒரு நிதியாண்டில் ஒருமுறை பணத்தை திரும்பப் பெறுவதற்கான உரிமையைப் பெறுவீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒவ்வொரு ஆண்டும் வட்டித் தொகையை மட்டும் எடுக்க வேண்டும். அதாவது, இப்போது உங்கள் PPF கணக்கிலிருந்து இந்த ஆண்டுக்கான வட்டித் தொகையான ரூ.7,31,869 மட்டும் எடுத்து உங்கள் சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். இந்தத் தொகை உங்களின் ஓய்வூதியம். இதை 12 மாதங்களுக்குப் பிரித்தால், ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ரூ.60,989 என்ற அளவில் எடுத்து, உங்கள் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இந்த பணம் எடுத்தாலும், PPF கணக்கில் உங்கள் இருப்பு தொகை ரூ.1,03,08,014 குறையாது, மேலும் அடுத்த ஆண்டிலும், ரூ.7,31,869 வட்டி பெறலாம். மேலும், ஒவ்வொரு ஆண்டும் திரும்பப் பெறப்படும் வட்டித் தொகை முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும், அதாவது இந்தத் தொகைக்கு நீங்கள் ஒருபோதும் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.

மேலும் படிக்க | ரூ.10,000 SIP மூலம் ரூ.1 கோடி கார்பஸ் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்? முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News