2000 ரூபாய் நோட்டை மாற்றும் முன் இந்த 7 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்..!
உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அருகில் உள்ள எந்த வங்கிக்கும் சென்று நோட்டை மாற்றிக்கொள்ளலாம். இது தவிர, நீங்கள் அவற்றை உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மே 19 ஆம் தேதி புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ள மே 23 ஆம் தேதியான இன்று முதல் தொடங்கியுள்ளது. உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அருகில் உள்ள எந்த வங்கிக்கும் சென்று நோட்டை மாற்றிக்கொள்ளலாம். இது தவிர, நீங்கள் அவற்றை கணக்கில் டெபாசிட் செய்யலாம். நோட்டுகளை மாற்ற அவசரப்பட வேண்டாம் என ஏபிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அடுத்த நான்கு மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
நோட்டுகளை எப்போது வரை மாற்றலாம்?
ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.2000 நோட்டு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மே 23 முதல் செப்டம்பர் 30, 2023 வரை வங்கிகளுக்குச் சென்று ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ளலாம். கணக்கிலும் டெபாசிட் செய்யலாம். ஒரே நேரத்தில் 10 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும்.
நோட்டுகளை மாற்ற பணம் செலவாகுமா?
2000 ரூபாய் நோட்டை வங்கியில் இருந்து மாற்ற பணம் தேவையில்லை என ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. வங்கிக்குச் சென்று கூடுதல் கட்டணம் ஏதுமின்றி ஒரே நேரத்தில் 10 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். வங்கி ஊழியர் அல்லது அதிகாரி சார்பாக உங்களிடமிருந்து எந்தவிதமான கட்டணமும் கோர முடியாது. இந்த வசதி முற்றிலும் இலவசம்.
மேலும் படிக்க | RD திட்டங்களிலும் நல்ல லாபம்... எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதம்?
வங்கிக் கணக்கில் எத்தனை நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்?
வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய வரம்பு இல்லை. உங்களிடம் உள்ள அனைத்து நோட்டுகளையும் உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். வங்கி விதிகளின்படி, 50000 அல்லது அதற்கு மேற்பட்ட வைப்புத்தொகைக்கு நீங்கள் பான்-ஆதார் அட்டையைக் காட்ட வேண்டும். இது தவிர, பணத்தை டெபாசிட் செய்யும் போது வருமான வரி விதிகளை மனதில் கொள்ளுங்கள்.
நோட்டுகளை மாற்ற அடையாளச் சான்று வழங்க வேண்டுமா?
பணத்தை மாற்ற எந்த வித அடையாளச் சான்றும் வழங்க வேண்டிய அவசியமில்லை. திங்களன்று, ரிசர்வ் வங்கி கவர்னரால் நோட்டுகளை மாற்ற எந்த அடையாள அட்டையும் தேவையில்லை என்று தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. சில வங்கிகள் அந்த வங்கியில் கணக்கு இல்லாத வாடிக்கையாளர்களுக்கு அடையாள அட்டையை வழங்கியுள்ளன.
செப்டம்பர் 30க்கு பிறகு 2000 நோட்டுகளுக்கு என்ன நடக்கும்?
செப்டம்பர் 30, 2023க்குள் உங்களால் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியாவிட்டால், இந்த நோட்டுகள் செல்லாது. ஆனால் அதன் பிறகு உங்கள் நோட்டுகளை வங்கியில் மாற்ற முடியாது. செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு, நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். இருப்பினும், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த வழிகாட்டுதலும் வழங்கவில்லை.
பொருளாதாரத்தில் என்ன பாதிப்பு ஏற்படும்?
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் ஏற்கனவே பேசியுள்ளார். 2000 நோட்டு புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டால், பொருளாதாரத்தில் மிகக்குறைந்த தாக்கமே ஏற்படும் என்றார். இந்த நோட்டுகள் புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சியில் 10.8 சதவீதம் மட்டுமே என்று தெரிவித்திருக்கும் அவர், பெரும்பாலான நோட்டுகள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் திரும்ப வந்துவிடும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
1000 ரூபாய் நோட்டு மீண்டும் புழக்கத்திற்கு வருமா?
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னரிடம் கேட்டபோது, ரூ.1000 நோட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட விவகாரம் வெறும் யூகமே என்றார். தற்போது அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நோட்டுகளை மாற்ற வங்கிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ