எவ்வளவு வருடங்கள் கடந்தாலும், எந்த ஊர் அல்லது உலக நாடுகளுக்கு சென்றாலும் என்றும் அழியாத தொழிலாக இருப்பது, உணவு சம்பந்தப்பட்ட அல்லது அதை சார்ந்த தொழில்தான். காரணம், மனிதன் இருக்கும் வரை உணவு தொழிலுக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கும். அதிலும் குறிப்பாக, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் உணவக தொழிலை ஆரம்பித்தால் வியாபாரமே அமோகமாக இருக்கும். உணவக தொழிலுக்கு எவ்வளவு போட்டி இருந்தாலும், அந்தந்த கடைகளில் நடைபெறும் வியாபரம் சரியாக நடைப்பெற்றுதான் வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹோட்டல்களில் வரும் பில்கள்..


நம்மில் பலர், என்றாவது ஒரு நாள் அல்லது வாரத்தில் ஒரு நாள் குடும்பத்துடனோ, நண்பர்கள் உடனோ வெளியில் சென்று உணவகங்களில் சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருப்போம். ஒரு சிலர், மெனு கார்டை பார்த்து விட்டு உணவை ஆர்டர் செய்யும் அளவிற்கு வசதி படைத்தவர்களாக இருப்பர். ஒரு சிலர், தங்களிடம் என்ன பட்ஜெட் இருக்கிறதாே அதை வைத்து மெனு கார்டில் இருக்கும் விலையை பார்த்து கணக்கு போடுபவராக இருப்போம். இதில், முதலாமவர் பில் எவ்வளளவு வந்தாலும் அது குறித்து கவலை படப்போவதில்லை. இரண்டாமவருக்குதான் பில் அதிகமாக வந்தால் பிரச்சனை. 


மொத்தமாக நாம் எவ்வளவு தொகைக்கு உணவு அருந்தி இருக்கிறோமோ, அதற்கு கொஞ்சம் கூடுதல் தொகை நம் பில்லில் வேறு பெயரில் கணக்கிடப்பட்டுள்ளதை பார்த்திருப்போம். ஆனால், பெரும்பாலான சமயங்களில் இருக்கும் தொகையை கொடுத்து விட்டு வந்து விடுவோம். ஆனால், இதனால் சில உணவகங்கள் லாபம் பார்க்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? 


பில் அதிகமாக வர காரணம்..


செர்வீஸ் சார்ஜ்:


சில உணவகங்கள், பில் போடுகையில் சர்வீஸ் சார்ஜ் (Service Charge)என்ற பெயரில் 5 முதல் 10 சதவிகிதம் வரை பில்லில் போட்டு கொடுப்பர். இதனால், முழு தொகை அதிகமாக வரலாம். இது, அவர்கள்  உங்களுக்காக வேலை செய்ததற்காக போடப்படும் தொகை ஆகும். இது, உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நீங்கள் டிப்ஸ் கொடுப்பது போன்றது. ஆனால், இதை கொடுக்க வேண்டுமா இல்லையா என்பது உங்களின் விருப்பம். அது போல, சர்வீஸ் சார்ஜ் கொடுக்க வேண்டுமா இல்லையா என்பதும் உங்கள் விருப்பம்தான். எனவே உங்களிடம் சர்வீஸ் சார்ஜுடன் ஒரு பில் வந்தால், அதை நீக்கி விட்டு வேறு பில் கொடுக்கும் படி கூறலாம். அதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. 


மேலும் படிக்க | மெடிக்கல் கொரியர் சேவை... ஸ்மார்ட்போன், பைக் இருந்தாலே போதும்... லட்சங்களில் வருமானம் கிடைக்கும்!!


சர்வீஸ் டேக்ஸ்:


ஒரு சில உணவகங்களில் சர்வீஸ் டேக்ஸ் (Service Tax) என்ற பெயரில் பில்லில் சில சதவிகிதங்களுக்கு தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் சதவிகிதம் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறலாம். சர்வீஸ் டேக்ஸை விதிப்பதற்கு, அந்த உணவகத்தில் ஏசி போட பட்டிருக்க வேண்டும். அப்படி, ஏசி போடாத உணவகம் இதை பில்லில் போட்டிருந்தால் அவர்களிடம் அதை நீக்கி வேறு பில் கொடுக்க சொல்லலாம். 


தள்ளுபடி கூப்பன்கள்:


ஸ்விக்கி டைன் அவுட் என்ற செயலி மூலமாக ஏதேனும் உணவகத்தில் சாப்பிட டேபிள் புக் செய்தால் உங்கள் பில்லில் சில சமயம் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி தரப்படும். அது மட்டுமன்றி, இதில் தள்ளுபடி கூப்பன்களும் வழங்கப்படலாம். எனவே, இது போன்ற உணவு டெலிவரி ஆப்களை உபயோகித்தும் நீங்கள் உணவகங்களில் பெறும் பில் தொகையை குறைக்கலாம். 


மேலும் படிக்க |  மே 1ம் தேதி முதல் இந்த 4 விதிகளில் மாற்றம்! மீறினால் அபராதம் விதிக்கப்படலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ