Jio Fiber News: ஜியோ ஃபைபர் (Jio Fiber) என்பது ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து ஒரு மேம்பட்ட பிராட்பேண்ட் இணைப்பாகும். இது இணைய வேகத்தை 100 எம்.பி.பி.எஸ் முதல் 1 ஜி.பி.பி.எஸ் வரை பயனர்களுக்கு கிடைக்கும் என்பதை உறுதியளிக்கிறது. இந்த சேவை ஏற்கனவே நாட்டின் 1600-க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் இது ஒரு பெரிய அளவிலான செயல்திறனைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் நாடு முழுவதும் மலிவு விலையில் அனைவருக்கும் சேவையை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கமாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், நீங்கள் ஜியோ ஃபைபர் பிராட்பேண்டைத் (Jio Fiber broadband) தேர்ந்தெடுப்பதற்கு முன், உங்கள் நகரத்தில் இந்த சேவை கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எனவே, உங்கள் பகுதியில் ஜியோ ஃபைபர் (Jio Fiber availability in your Area) கிடைப்பதை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதைக் கண்டுபிடிப்போம்.


ALSO READ |  Jio vs Airtel vs Vodafone திட்டங்களின் முழுமையான பட்டியல்!! எது சிறந்தது அறிந்து கொள்ளுங்கள்


உங்கள் பிராந்தியத்தில் ஜியோ ஃபைபர் கிடைப்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்? அதற்கான விளக்கம்!


படி 1: முதல் கட்டமாக ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். அதற்கு இந்த இணைப்பை https://www.jio.com/registration# கிளிக் செய்ய வேண்டும். 


படி 2: நீங்கள் இணையதளத்தில் வந்ததும், உங்கள் பெயரையும் உங்கள் தொடர்பு எண்ணையும் உள்ளிட வேண்டும்.


படி 3: "OTP"-ஐ உருவாக்கு பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.


வழங்கப்பட்ட தொடர்பு எண்ணில் நீங்கள் இப்போது OTP ஐப் பெறுவீர்கள். OTP ஐ உள்ளிடவும், உங்கள் பிராந்தியத்தைப் பற்றிய மேலும் சில விவரங்களை நிரப்புமாறு கேட்கப்படுவீர்கள்.


ALSO READ |  அட்டகாசமான அம்சங்களுடன் களமிறங்கும் JioPhone 5.... விலை ₹.500-க்கும் குறைவு...


உங்கள் பிராந்தியத்தில் ஜியோ ஃபைபர் சேவை இருக்கும் என்றால், அனைத்து விவரங்களையும் வலைத்தளத்தில் காண்பிக்கும். அதே நேரத்தில் உங்கள் பகுதியில் சேவை இல்லையெனில், அங்கு சேவை தொடங்கப்பட்டவுடன் நிறுவனத்திடமிருந்து அறிவிப்பைப் பெறுவீர்கள்.


ஜியோ ஃபைபர் திட்டங்கள் (Jio Fiber plans) 
ஜியோ ஃபைபர் தற்போது அதன் சந்தாதாரர்களுக்கு Bronze, Silver,  Gold, Diamond, Platinum மற்றும் Titanium உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு திட்டங்களை வழங்குகிறது. ஒவ்வொரு திட்டத்திற்கும் அவற்றின் வேகம் மற்றும் செல்லுபடியாகும் விலைகள் இங்கே.