EPF Account: ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதியத்தில் 12% தொகை இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. அதே அளவு தொகையை நிறுவனம் பணியாளர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறது. EPF எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி, ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படுகின்றது. இது ஊழியர்களின் பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் முக்கியமான நிதி பாதுகாப்பாக கருதப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாதா மாதம் இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அரசாங்கம் வட்டியும் அளிகின்றது. தற்போது இபிஎஃப் தொகைக்கு (EPF Amount) 8.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. EPF உறுப்பினர்கள் இபிஎஃப் கணக்கு (EPF Account) மூலம் ஒரு பெரிய ஓய்வூதிய நிதியைச் சேர்க்க முடியும். 


இபிஎஃப் கணக்கிலிருந்து இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணத்தை எடுக்கும்போது, அந்த தொகை நேரடியாக, அவர்களது இபிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு செல்லும். எனினும், இபிஎஃப் கனக்குடன் இணைக்கப்பட்டிருந்த உங்கள் வங்கிக் கணக்கு மூடப்பட்டிருந்தால், உங்கள் புதிய வங்கிக் கணக்கை இபிஎஃப் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பின்னர்தான் உங்கள் இபிஎஃப் தொகையை உங்களால் எடுக்க முடியும். 


மேலும் படிக்க | ITR Refund Scan: மோசடி நபர்களின் வலையில் சிக்கினால் லட்சங்களில் இழப்பு.... எச்சரிக்கும் வருமான வரித்துறை


நீங்களும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டால், புதிய வங்கிக் கணக்கை இபிஎஃப் கணக்குடன் இணைப்பதற்கான செயல்முறையை தெரிந்துகொள்ளுங்கள். அதற்கான முழு வழிமுறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறையை பின்பற்றி உங்கள் இபிஎஃப் கணக்கை புதிய வங்கிக் கணக்குடன் இணைக்கலாம். 


புதிய வங்கிக் கணக்கை இபிஎஃப் கணக்குடன் இணைப்பதற்கான முழுமையான செயல்முறை


- இதை செய்ய முதலில், https://unifiedporta mem.epfindia.gov.in/memberinterface என்ற EPFO ​​இன் ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.


- இதற்குப் பிறகு, உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.


- லாக் இன் செய்த பின்னர், ‘Manage’ என்ற டேபை கிளிக் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து ஒரு டிராப் டவுன் மெனு உங்கள் முன்னால் தோன்றும். 


- இந்த மெனுவிற்குச் சென்று KYC ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


- இதன் பிறகு, உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்து கணக்கு எண், பெயர் மற்றும் IFSC ஆகிய விவரங்களை நிரப்பவும்.


- இதைச் சப்மிட் செய்த பிறகு, உங்கள் வங்கிக் கணக்கை இபிஎஃப் கணக்குடன் இணைக்கும் செயல்முறை உங்கள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. 


- உங்களுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் உங்கள் EPF கணக்குடன் வங்கிக் கணக்கு இணைக்கப்படும்.


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, பிஎஃப் உறுப்பினர்களின் நன்மை மற்றும் வசதிக்காக அவ்வப்போது புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது, ஏற்கனவே இருக்கும் விதிகளில் மாற்றங்களையும் செய்கிறது. இந்த மாற்றங்கள் பற்றிய புரிதல் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டுயது மிக அவசியமாகும். இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) வசதிகளை அதிகரிக்க, இபிஎஃப்ஓ சமீபத்திலும் பல விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது.


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு வந்தால் 44% ஊதிய உயர்வு, DA, TA, HRA அனைத்திலும் ஏற்றம்... வருமா, வராதா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ